படகுகளை அப்புறப்படுத்தக் கோரி தாக்குதல்: இந்தி நடிகர் சல்மான்கான் மீது மீனவர் புகார்
Page 1 of 1

இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 2011-ம் ஆண்டு மும்பை அருகே உள்ள பாந்த்ரா கடற்பகுதியில் 'பெல்லே வியு' மற்றும் 'பேனர்' என்ற இரு சொகுசு பங்களாக்களை விலைக்கு வாங்கி, அதைச் சுற்றி சுவர் எழுப்பியுள்ளார்.
இவருடைய பங்களாவில் இருந்து கடற்கரை அழகை ரசிக்க கடற்கரையில் இருக்கும் படகுகளும், வலைகளும் இடையூறாக இருப்பதாகக்கூறி, அவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டுமென்று சல்மான்கானின் பாதுகாவலர்கள் அதே பகுதியில் பூர்வீகமாக குடியிருக்கும் 65 வயதுடைய லாரன்ஸ் பால்கன் என்ற மீனவரை வற்புறுத்தியுள்ளனர். ஆனால், லாரன்ஸ் இதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர் ஒருவரை சல்மான்கானின் பாதுகாவலர்கள் தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து லாரன்ஸ் மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், சல்மான்கானின் பாதுகாவலர்கள் அவருக்கு தொந்தரவு கொடுப்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது படகை மூடி வைக்கும் பிளாஸ்டிக் பைகள் அடிக்கடி காணாமல் போவதாகவும் கூறியுள்ளார்.
சல்மான்கான் வீடு வாங்கிய பின்தான் தனக்கு இதுமாதிரியான பிரச்சினைகள் வருவதாகவும், தன்னுடைய உறவினர் ஒருவரையும் சல்மான்கானின் பாதுகாவலர்கள் தாக்கியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், இதுகுறித்து ஏற்கெனவே மூன்று முறை புகார் செய்தும் எந்த பலனும் இல்லை. எனவே, தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வரும் சல்மான்கான் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுபற்றி சல்மான்கானிடம் கேட்டபோது எந்த கருத்தையும் கூற மறுத்துவிட்டார்.
ஏற்கெனவே, மானை வேட்டையாடிய வழக்கில் சிறை சென்ற சல்மான்கான், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது குடிபோதையில் காரை ஏற்றிய வழக்கிலும் சிக்கினார். இந்த நிலையில் தற்போது, இவர் மீது மீனவர் ஒருவர் புகார் கொடுத்திருப்பது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘மங்காத்தா’ பட நடிகர் மகத் மீது தாக்குதல்: நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜை கைது செய்ய தீவிரம்
» தயாரிப்பாளர் கேயார் தலைமையில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நடவடிக்கை கோரி புகார்
» நடிகர் சந்தானம் மீது எப்ஐஆர் பதியக் கோரி பாக்யராஜ் வழக்கு
» மகன் படத்தில் பிராமனர்களை இழிவுபடுத்தும் காட்சி: நடிகர் மோகன்பாபு வீடு மீது திடீர் தாக்குதல்
» நடிகர் சித்தார்த் மீது போலீசில் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum