தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாட்டைக் காப்பாற்றுபவனாக நடிக்க முடியாது: சிவா

Go down

நாட்டைக் காப்பாற்றுபவனாக நடிக்க முடியாது: சிவா  Empty நாட்டைக் காப்பாற்றுபவனாக நடிக்க முடியாது: சிவா

Post  ishwarya Wed Mar 13, 2013 4:54 pm

சென்னை : 360 டிகிரி பிலிம் கார்ப் சார்பில் ஹபீப், சாந்திகா தயாரிக்கும் படம், ‘சொன்னா புரியாது’. சிவா, வசுந்தரா ஜோடி. கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார். இதன் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிவா பேசியதாவது: ‘தமிழ்ப் படம்’, ‘வ’ ‘குவார்ட்டர் கட்டிங்’ படங்களுக்குப் பிறகு டைரக்ஷன் செய்ய முடிவு எடுத்தேன். அப்போது ‘கலகலப்பு’ ரிலீசாகி ஹிட்டானது. ‘சொன்னா புரியாது’, ‘தில்லு முல்லு’ வாய்ப்புகள் வந்ததால் மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன். இந்தப் படத்தின் இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ், காமெடி சென்ஸ் உள்ளவர்.

அதனால்தான் இந்தப் படம் ரொமான்டிக் காமெடியாக, எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்துள்ளது. இதில் நான் நாட்டைக் காப்பாற்றும் ஹீரோவாக நடிக்கவில்லை. அப்படி நடிக்கவும் முடியாது. காதல் கதையில் நடித்திருக்கிறேன். அதுதான் எனக்கு பொருத்தமாக இருக்கும். இவ்வாறு சிவா பேசினார். சுசீந்திரன், டி.சிவா, எஸ்.பி.பி.சரண், சி.வி.குமார், யு.டி.வி தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum