தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வைபவ் - சஞ்சிதா ஷெட்டி ஜோடி சேரும் ‘பீட்சா 2- தி வில்லா’

Go down

வைபவ் - சஞ்சிதா ஷெட்டி ஜோடி சேரும் ‘பீட்சா 2- தி வில்லா’ Empty வைபவ் - சஞ்சிதா ஷெட்டி ஜோடி சேரும் ‘பீட்சா 2- தி வில்லா’

Post  ishwarya Sat Mar 16, 2013 12:36 pm

அட்டக்கத்தி’, ‘பீட்சா’ ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது ‘பீட்சா’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறது.

‘பீட்சா’ படத்தின் முதல் பாகத்தை கார்த்திக் சுபாராஜ் என்ற புதுமுக குறும்பட இயக்குனர் இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளிவந்த இந்த படம் சென்ற வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது.

இந்நிலையில், ‘பீட்சா’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் இந்த முறை இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர், நடிகைகள் என அனைத்திலும் மாற்றம் செய்துள்ளது.

அதன்படி, இந்த படத்தை தீபன் சக்கரவர்த்தி என்ற புதுமுக குறும்பட இயக்குனர் இயக்கவிருக்கிறார். மேலும் கதாநாயகனாக ‘சரோஜா’, ‘மங்காத்தா’ ஆகிய படங்களில் நடித்த வைபவ் நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘கொள்ளைக்காரன்’ படத்தில் நடித்த சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.

படத்திற்கு ‘பீட்சா 2- தி வில்லா’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். முதல் பாகத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனே இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார். பிற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பை துவங்க இருக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum