தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏப்ரலில் தொடங்குகிறது ‘பீட்சா 2 – தி வில்லா’ படப்பிடிப்பு

Go down

ஏப்ரலில் தொடங்குகிறது ‘பீட்சா 2 – தி வில்லா’ படப்பிடிப்பு Empty ஏப்ரலில் தொடங்குகிறது ‘பீட்சா 2 – தி வில்லா’ படப்பிடிப்பு

Post  ishwarya Fri Mar 22, 2013 2:02 pm



கடந்த ஆண்டு வெளியான குறும் பட்ஜெட் திரைப்படமான பீட்சா யாரும் எதிர்பார்க்காத அளவில் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும் ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். பீட்சா திரைப்படத்தின் வெற்றி அதன் தயாரிப்பாளரை இரண்டாம் பாகத்தை எடுக்க தூண்டியுள்ளது. இதன் இரண்டாம் பாகம் ‘பீட்சா 2 – தி வில்லா’ என்ற பெயரில் தயாராக இருக்கிறது.

ஆனால் இந்த முறை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை தவிர மொத்தமாக படக்குழுவே மாறியிருக்கிறது. சரோஜா, மங்காத்தா படங்களில் நடித்த வைபவ் நாயகனாகவும், தில்லாலங்கடி, கொள்ளைக்காரன் படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டி நாயகியாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்கவும் ஒரு புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பளித்துள்ளார் தயாரிப்பாளர் சி.வி. குமரன். குறும் பட இயக்குனர் தீபன் சக்கரவர்த்தி என்பவரை இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார். படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum