விஸ்வரூபம்: மீண்டும் பிரச்சினையை கிளப்பும் அமீர்
Page 1 of 1

விடுதலைப் புலிகளை போலத்தான், தலிபான்களும் தங்கள் நாட்டுக்காக போராடுகின்றனர், அவர்களை விஸ்வரூபம் படத்தில் தப்பாக சித்தரித்துள்ளனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார் இயக்குனர் அமீர்.
கமல் இயக்கி, நடித்த ‘விஸ்வரூபம்’ படம் தடைகள் பல கடந்து, திரையரங்குகளில் வெளியாகி வசூலிலும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் அமீர் புதிதாக ஒரு பரபரப்பை கிளப்பி வருகிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில்,
‘விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. ஆனால் தலிபான் போராளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆப்கன் மக்களுக்காவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் போராடும் போராளியை தவறாக சித்தரித்து உள்ளனர்.
இலங்கையில் தனிஈழத்திற்காக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் எப்படி போராடினார்களோ, அவர்களை தவறாக சித்தரித்தால் என்ன நிகழுமோ அப்படித்தான் விஸ்வரூபம் படமும். எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும், தீவிரவாதிகள் என்று படத்தில் காட்டக்கூடாது.
ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள். எனவே ‘விஸ்வரூபம்’ படத்தில் தன் மண்ணுக்காக போராடும் தலிபான்களை தவறாக சித்தரித்து இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
‘விஸ்வரூபம்’ படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தபோது அதை எதிர்த்து போராடியவர்களில் அமீரும் ஒருவர். இந்நிலையில், அமீர் இவ்வாறு பேசியிருப்பது சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்ப தூண்டுவதுபோல் அமைந்துள்ளது இவருடைய பேச்சு எனவும் கூறப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் தேதியை மாற்றினார் கமல்… 7-ம் தேதி விஸ்வரூபம் ஆடியோ!!
» மீண்டும் மைக் பிடித்த அமீர்!
» விஸ்வரூபம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்: இயக்குனர் அமீர் வேண்டுகோள்
» விஸ்வரூபம் படத்துக்கு மீண்டும் தடை
» விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum