தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Go down

விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Empty விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Post  ishwarya Mon May 27, 2013 5:25 pm

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இன்று தடை விதித்தது. விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடைவிதித்ததை தொடர்ந்து, கமல் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்றிரவு 10 மணிக்கு படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று இரவு 11 மணிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எலிபி தர்மராவின் வீட்டுக்குச் சென்ற அரசு வழக்கறிஞர்கள் படத்துக்கு தடை விதிக்கக் கோரி அப்பீல் மனு தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நாளை காலை(இன்று) இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து தடை நீக்கத்தை எதிர்த்து இன்று காலை தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.

பின்னர் வழக்கு மதியம் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிபதி எலிபி தர்மராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.

இதன் பின்னர் நீதிபதிகள், தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் வரும் திங்கள்கிழமைக்குள்(பிப்ரவரி 4ஆம் திகதி) பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணையை 6ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum