மீண்டும் மைக் பிடித்த அமீர்!
Page 1 of 1
மீண்டும் மைக் பிடித்த அமீர்!
தான் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த யோகி சரியாகப் போகாத வருத்தத்திலிருந்த இயக்குநர் அமீர், அடுத்து இயக்கும் கண்ணபிரான் படத்தை பெரிய ஹிட் படமாக்கிவிட்டுத்தான் மேடையேறுவேன் என்று சபதமெடுத்திருந்தார். இதனால் சமீப காலமா எந்த திரைப்பட விழாவிலும் அவர் பங்கேற்காமல் இருந்தார்.
ஆனால் அந்த சபதத்தை கைவிட்டு இன்று ஒரு விழாவில் அவர் பங்கேற்றார்.
அது மாத்தியோசி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தை பிஎஸ்எஸ்ஆர் மூவீஸ் பேனரில் தயாரிக்கிறார் பிஎஸ் சேகர் ரெட்டி. குருகல்யாண் இசையமைத்துள்ளார்.
சத்யம் சினிமாஸ் சுபம் அரங்கில் இந்த விழா நடந்தது. பாடல்களை இயக்குநர் அமீர், கலைப்புலி சேகரன் ஆகியோர் வெளியிட, சமுத்திரக்கனி, சுப்பிரமணியம் சிவா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் அமீர் பேசியது:
பொதுவாக விழாக்களையே தவிர்க்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று அது முடியவில்லை.
இந்தப் படத்தை இயக்கும் நந்தா பெரியசாமி பெரிய போராட்டங்களைச் சந்தித்தவர். வெற்றி பெற்றவர்களின் மேடையில் ஏறுவதைவிட, இதுபோல் தோல்வியைச் சந்தித்து வெற்றிக்காகப் போராடுபவர்களின் மேடையில் ஏறுவதையே சிறந்ததாகக் கருதுகிறேன்.
இந்தப் படத்தில் நந்தா பெரியசாமி நிச்சயம் வெற்றியைப் பெறுவார். படத்தின் தலைப்பே அதைச் சொல்லுகிறது. மாத்தி யோசித்தால்தான் நல்ல சினிமா வரும்.
என் நண்பர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, சுப்பிரமணியம் சிவா போன்றோர் மிகவும் போராடித்தான் தமிழ் சினிமாவில் வெற்றிக் கோட்டைத் தொட்டார்கள்.
இந்த விழாவுக்கு பெரிய நட்சத்திரங்களின் பெயர்களை அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தும் அவர்கள் மேடையில் இல்லையே என்று நந்தா பெரியசாமி வருத்தப்படக்கூடும். வருந்த வேண்டாம்… உங்களின் இந்த வெற்றி அவர்களையெல்லாம் உங்களுடைய அடுத்த விழாவுக்கு நிச்சயம் வரவழைக்கும்” என்றார்.
விழாவில் சன் டிவி சக்சேனா உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம்: மீண்டும் பிரச்சினையை கிளப்பும் அமீர்
» ராசு.மதுரவன் இயக்கும் மைக் செட் பாண்டி
» மைக் டைசன் மனைவியுடன் படுக்கையில் சிக்கிய பிராட் பிட்
» மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு
» உதயநிதிக்கு பிடித்த நாயகி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum