தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவாஜி படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு: டிஜிட்டலுக்கு மாறும் வீரபாண்டிய கட்டபொம்மன், புதிய பறவை

Go down

சிவாஜி படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு: டிஜிட்டலுக்கு மாறும் வீரபாண்டிய கட்டபொம்மன், புதிய பறவை Empty சிவாஜி படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு: டிஜிட்டலுக்கு மாறும் வீரபாண்டிய கட்டபொம்மன், புதிய பறவை

Post  ishwarya Sat Mar 16, 2013 12:02 pm

சிவாஜி கணேசனின் பழைய படங்கள் டிஜிட்டலுக்கு மாறி வருகின்றன. ஏற்கனவே கர்ணன் படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட வெற்றிகரமாக ஓடியது. பல தியேட்டர்களில் 50 நாட்களை தாண்டி ஓடியது. வசூலிலும் சாதனை படைத்தது.

இதையடுத்து வசந்த மாளிகை படமும் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப்பில் மாற்றி நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. 72 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த வாரம் வெளியாகிறது.

வசந்த மாளிகை படத்தை சிவாஜி ரசிகர்கள் நேற்று கூட்டம் கூட்டமாய் வந்து பார்த்தனர். தியேட்டர்களில் சிவாஜி கட்- அவுட்கள் வைத்து இனிப்பு வழங்கினார்கள்.

எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டரில் சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் பூமிநாதன் உணவு வழங்கினார். சூளை ராஜேந்திரன், கொண்டல் தாசன், சிவா, கணேசன், உள்ளிட்ட சிவாஜி ரசிகர் மன்ற பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் கொடி தோரணங்கள் அமைத்து வசந்த மாளிகை படம் ரிலீசை கொண்டாடினார்கள்.

ரசிகர்கள் வரவேற்பை தொடர்ந்து சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன், பாசமலர், புதிய பறவை படங்களும் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

பாசமலர் படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இதில் சிவாஜியும் சாவித்திரியும் அண்ணன், தங்கையாக நடித்துள்ளனர். வீரபாண்டிய கட்ட பொம்மன் படம் 1959-ல் ரிலீசானது. சிவாஜி, பத்மினி, ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்துள்ளனர். பி.ஆர். பந்துலு இயக்கினார்.

புதிய பறவை படத்தில் சிவாஜி, சரோஜாதேவி ஜோடியாக நடித்தனர். 1964-ல் ரிலீசானது.

இப்படத்தில் இடம்பெற்ற எங்கே நிம்மதி, சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து, உன்னை ஒன்று கேட்பேன், ஆகா மெல்ல நட, பார்த்த ஞாபகம் இல்லையோ, பாடல்கள் அப்போது பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வீரபாண்டிய கட்டபொம்மன்
» சிவாஜியின் ‘கர்ணன்’ வசூல் சாதனையடுத்து ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ 3டி-யில் தயாராகிறது
» மாமியார் பிறந்த ஊரில் ஐஸ்வர்யாராய்க்கு ரசிகர்கள் வரவேற்பு
» புதிய பறவை” படத்துக்கு திரண்ட ரசிகர்கள் கூட்டம் பார்த்து அதிர்ச்சியானேன்- பிரபு
» புது வடிவம் பெறப்போகிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்'!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum