தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புது வடிவம் பெறப்போகிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்'!

Go down

புது வடிவம் பெறப்போகிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்'! Empty புது வடிவம் பெறப்போகிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்'!

Post  ishwarya Mon Mar 18, 2013 6:15 pm

தற்போது எந்த படத்திற்கு கூட்டம் சேருகிறதோ இல்லையோ, சிவாஜி கணேசனின் 'கர்ணன்' படத்திற்கு அனைத்து திரையரங்குகளிலும் அமோக கூட்டம் கூடுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியான 'கர்ணன்' படம் நான்கு வாரங்களையும் கடந்து ஓடிகொண்டிருக்கிறது. ரசிகர்களின் இந்த அமோக வரவேற்பை பார்த்து சிவாஜி கணேசனின் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தையும் டிஜிட்டல் முறையில் புது பொலிவுடன் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. 'கர்ணன்' படத்தை தற்போது வெளியிட்டுள்ள ஸ்ரீ திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஷாந்தி சொக்கலிங்கம் இது பற்றி கூறுகையில், "சிவாஜி ரசிகர்களை கருத்தில் கொண்டுதான் 'கர்ணன்' படத்தை வெளியிட்டோம். அது தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 'கர்ணன்' படத்தைப் பார்த்தவர்களின் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் கூட்டம் தான். நகரப் பகுதிகளில் 'கர்ணன்' படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 'கர்ணன்' படத்தை தொடர்ந்து 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை வெளியிடவும் முடிவு செய்திருக்கிறோம். இப்படத்தின் உரிமையை வைத்துள்ள ராஜ் டிவியிடம் இது குறித்து பேசி வருகிறோம்." என்றார். அப்டிபோடுங்க.. ஜாக்ஸன் துரையே அசந்திடுவாரு......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum