தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரதேசி படம் என்னை தகர்த்தெறிந்துவிட்டது: அனுராக் காஷ்யப்

Go down

பரதேசி படம் என்னை தகர்த்தெறிந்துவிட்டது: அனுராக் காஷ்யப் Empty பரதேசி படம் என்னை தகர்த்தெறிந்துவிட்டது: அனுராக் காஷ்யப்

Post  ishwarya Sat Mar 16, 2013 11:40 am


பாலாவின் பரதேசி படம் இந்தியா முழுவதும் நாளை வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் அதர்வா, தன்ஷிகா, வேதிகா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஹிந்தியில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ள பாலிவுட் இயக்குனரும், பிரபல தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் இப்படத்தைப் பற்றி தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது,

என்னை பெரிதும் பாதித்த இயக்குனர்களில் பாலா முக்கியமானவர். என்னுடைய முதல் படமான பாஞ்ச் படத்தை எடுத்துக் கொண்டிருந்த போதுதான் சேது படத்தை பார்த்தேன். சேது என்னை முழுமையாக பாதித்தது. அன்றிலிருந்து நான் பின்பற்றுகின்ற கலைஞனாக இருந்து வருகிறார் பாலா. ‘நான் கடவுள்’ திரைப்படத்தை பார்த்தபோது என்னை அப்படம் மிகப்பெரிய அளவில் பாதித்தது. அதை வெளிப்படுத்தவே என்னுடைய ‘கேங்ஸ் ஆப் வசேபூரி’ல் அவருக்கான நன்றியை தெரிவித்திருந்தேன்.

இதுவரை யாரும் காட்டிராத அளவிற்கு நான் கடவுளில் என்னுடைய நகரத்தினை அத்தனை அழகோடு காண்பித்திருந்தார். இந்தியாவில் இருக்கிற எந்த இயக்குனரும் ‘பரதேசி’யில் பாலா உருவாக்கியிருப்பதை போன்ற பழங்காலத்தையும், இடங்களையும் உருவாக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் அறிந்தவரை இந்தியாவின் எந்த ஒரு இயக்குனரும் வடக்கிலோ, தெற்கிலோ இம்மாதிரியான அக்காலக்கட்ட கலாச்சாரத்தையும், மக்களையும் இத்தனை நம்பகத்தன்மையோடு பதிவு செய்ததில்லை.

இவருடைய எல்லாப் படங்களும சிறப்பானவை என்பதை அப்படங்களைப் பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள். அக்கால வாழ்வியலையும், மக்களின் உணர்வுகளையும் பதிவு செய்த சிறப்பான திரைப்படம் ‘பரதேசி’. திரையில் மக்களின் உணர்வுகளை இத்தனை இயல்பாக நான் இதுவரை கண்டதில்லை.

பல தென்னிந்திய திரைப்படங்கள் குறுகிய வட்டத்திற்குள்ளாகவே முடங்கி விடுகின்றன. அதையும் தாண்டி வெளியே வந்தால், அதனை வெளியூரில் வாழும தமிழ் மக்கள் மட்டுமே பார்க்கின்றனர். என்னைப் பொருத்தவரை ‘பரதேசி’ பலதரப்பட்ட பெருவாரியான பார்வையாளர்களை சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அத்தனை தகுதிகளையும் கொண்டுள்ள திரைப்படம் இது.

இப்படத்தினை ஆங்கிலம் மற்றும ஹிந்தி சப்டைட்டிலுடன் எல்லா இடத்திலும் வெளியிடவுள்ளோம். இதற்காகவே நான் ‘பரதேசி’ பார்ப்பதற்கு விருப்பப்பட்டேன். அதற்கான வாய்ப்பு அமைந்தபோது உடனே பார்த்துவிட்டேன். ‘பரதேசி’ படம் பார்த்து தகர்த்தெறியப்பட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum