தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பருப்பு ரசம்

Go down

பருப்பு ரசம்  Empty பருப்பு ரசம்

Post  oviya Sat Mar 16, 2013 10:51 am

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு = 1 கரண்டி
பெருங்காயம் = சிறிதளவு
மஞ்சள் பொடி = சிறிதளவு
புளி = அரை எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் = 1
மிளகு = 1 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
தனியா = அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 1
கடலை பருப்பு = அரை ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
நெய் = தாளிக்க‌
உப்பு = தேவையான அளவு

செய்முறை:


பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து வேக விட்டு கடைந்து கொள்ளவும். இதில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வைக்கவும். புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

மிளகு, சீரகம் உடைத்து சேர்க்கவும். தனியா, மிளகாய் வற்றல், கடலை பருப்பு ஆகியவற்றை சிறிது எண்ணெயில் நன்றாக வறுத்து கொரகொரப்பாகப் பொடி செய்து சேர்க்கவும். பச்சை மிளகாயை கீறி சேர்க்கவும்.

இதை நுரை வரும் அளவு கொதிக்க விட்டு உப்பும், பருப்புத் தண்ணீரும் சேர்த்து இறக்கவும். கொத்தமல்லி சேர்க்கவும்.

நெய்யில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

சுவையான பருப்பு ரசம் தயார்.

மருத்துவ குணங்கள்:

துவரம் பருப்பில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் B அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், நீரிழிவு போன்றவற்றை குறைக்கும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum