பருப்பு ரசம்
Page 1 of 1
பருப்பு ரசம்
என்னென்ன தேவை?
குழைய வேக வைத்த துவரம் பருப்பு - அரை கப்,
பருப்புத் தண்ணீர் - 2 கப்,
புளி - 1 சிறு உருண்டை,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 2,
காய்ந்த மிளகாய் - 2,
மிளகு - அரை டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள் - தேவைக்கேற்ப,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி - சிறிது.
எப்படிச் செய்வது?
புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டவும். வடிகட்டிய தண்ணீரில் இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து, தீயைக் குறைத்து வைத்துக் கொதிக்க விடவும். புளித் தண்ணீர் பாதியாக வற்றியதும், மிளகு, சீரகம் பொடித்துப் போட்டு, அத்துடன் குழைந்த துவரம் பருப்பு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு பருப்புத் தண்ணீரை விளாவி ஊற்றவும். ரசம் நுரைகட்டி வரும் போது, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum