முட்டை ஃபேஸ் பேக்
Page 1 of 1
முட்டை ஃபேஸ் பேக்
சருமப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முட்டை சிறந்த பொருளாக உள்ளது. ஏனெனில் முட்டையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், அவை பழுதடைந்த செல்களை சரிசெய்து, சருமப் பிரச்சனைகளான பருக்கள், சரும சுருக்கம், அதிகப்படியான எண்ணெய், வறட்சி போன்றவற்றை தடுக்கும். சருமத்தைப் பராமரிக்க, முட்டையை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடுவது என்று பார்க்கலாம்.
* முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் காய வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் இறுக்கமடைந்து, புத்துணர்ச்சியுடன் இருக்கும். முக்கியமாக முகத்தில் பருக்கள் இருந்தால், முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தடவ வேண்டும்.
* முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் ஓட்ஸை பொடி செய்து போட்டு, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை தடுக்கலாம்.
* ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி, தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமம் இறுக்கமடைந்து, வறட்சியின்றி பொலிவோடு இருக்கும்.
* ஒரு பௌலில், வெள்ளரிக்காய் சாறு, பால் பவுடர் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து, நீரில் கழுவ வேண்டும். முகத்திற்கு தடவும் போது, கண்களைச் சுற்றி தடவ வேண்டாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாதாம் ஃபேஸ் பேக்
» பாதாம் ஃபேஸ் பேக்
» வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
» விஸ்கி ஃபேஸ் பேக்
» வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
» பாதாம் ஃபேஸ் பேக்
» வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
» விஸ்கி ஃபேஸ் பேக்
» வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum