கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்
Page 1 of 1
கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்
இளம் நரைக்குப் பித்தம்தான் காரணம். கவலையும், மனச்சோர்வும் தலையைப் பலவீனப்படுத்தி, நரையை ஏற்படுத்தும். அதிகம் காபி, தேநீர் பருகினால் பித்தம் ஏற்படும். இளம் நரையைத் தடுக்க பச்சைக் காய்கறிகள், பழ வகைகள் நிறையச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* வெந்தயக் கீரையை அரைத்துத் தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து தலையை அலசினால், கூந்தல் உதிர்வது குறையும்.
* முதல்நாள் இரவு இரண்டு கைப்பிடி வேப்பிலையை இரண்டு குவளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் மறுநாள் காலை தலைக்குக் குளிக்கும்போது தலையை அந்த நீரில் அலசினால் பேன் தொல்லை நீங்கும்.
* வாரம் ஒருநாள் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை அரைத்து உருண்டையளவு சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.
* செம்பருத்தி இலையைக் கொதிக்கும் வெந்நீரில் போட்டு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் இலையை எடுத்துப் பிழிந்தால் அருமையான ஷாம்பு ரெடி.
* வாரம் ஒருமுறை தவறாமல் முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் மூன்று மாத காலம் குளித்துப்பாருங்கள். எந்தக் காரணத்தினால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். இந்தக் கீரை நரை விழுவதையும் தடுக்கும். கருகருவென முடி வளரும்.
* புளிப்புச் சுவை கொண்ட உணவுப்பொருள்களை அதிக அளவில் உண்பது தலை முடிக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு
» குளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum