டயட் தோசை
Page 1 of 1
டயட் தோசை
தேவையான பொருட்கள்:
கொள்ளு - கால் கப்
பார்லி - கால் கப்
வெள்ளை சென்னா - கால் கப்
புழுங்கல் அரிசி - கால் கப்
வால் நட் - கால் கப்
ராகி மாவு - ஒரு ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
புதினா - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 50 கி (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - 3 ஸ்பூன்
செய்முறை:
* கொள்ளு, வெள்ளை சென்னா, அரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்
* பார்லி அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன் ஊற வைக்கவும்.
* வால் நட்டை ஒரு மணி நேரம் முன் கொதிக்கும் வெந்நீரில் ஊறவைத்து தோல் உரித்து வைத்து கொள்ளவும்.
* அரைக்கும் போது பூண்டு, இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
* முதலில் அரிசியை போட்டு நன்கு அரைத்து கொண்டு மீதி உள்ள அனைத்து பொருட்களையும் முக்கால் பதத்திற்கு அரைக்கவும்.
* அரைத்த கலவையில் வெங்காயம், கொத்தமல்லி, புதினா கறிவேப்பிலையை பொடியாக அரிந்து சேர்க்கவும்.
* அரைத்த கலவை கெட்டியாக இருக்க வேண்டும்.
* தோசை கல்லில் தோசைகளாக ஊற்றி ஓரங்களில் கொஞ்சம் ஆலிவ் ஆயில் தெளித்து சுட்டெடுக்கவும்.
* இந்த டயட் தோசை மிகவும் சத்தான உணவாகும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டயட் அடை
» டயட் மிக்சர்
» டயட் பெஸரட்டு தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» டயட் அடை டயட் அடை
» டயட் மிக்சர்
» டயட் பெஸரட்டு தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» டயட் அடை டயட் அடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum