தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முளைகட்டிய பச்சைப்பயறு சுண்டல்

Go down

முளைகட்டிய பச்சைப்பயறு சுண்டல்  Empty முளைகட்டிய பச்சைப்பயறு சுண்டல்

Post  ishwarya Fri Mar 15, 2013 2:23 pm

தேவையான பொருட்கள்....

ஜவ்வரிசி - 1 கப்
முளைகட்டிய பச்சைப்பயறு - 2 கப்
இஞ்சி - சிறிய துண்டு (துருவிக்கொள்ளவும்)
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து உடைத்த வேர்க்கடலை - 1 கப்
தேங்காய்த்துருவல் - கால் கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சம்பழம் - 1 சிறியது
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை....

* எலுமிச்சை பழத்தை சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

• ஜவ்வரிசியை தேவையான தண்ணீர் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

• கடாயில் நெய்விட்டு ஊறிய ஜவ்வரிசி கலவையைப் போட்டு மிதமான தீயில் பஞ்சு போல் மிருதுவாகும் வரை மூடி வேகவிடவும்.

• அதில் முளைகட்டிய பயறுகளை சேர்த்து வதக்கி வேகவிடவும்.

• பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அத்துடன் வேர்க்கடலை, தேங்காய்த்துருவல், மிளகுத்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை சேர்த்து கிளறி பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum