தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ட்ராபெர்ரி சாண்ட்விச்

Go down

ஸ்ட்ராபெர்ரி சாண்ட்விச்                    Empty ஸ்ட்ராபெர்ரி சாண்ட்விச்

Post  ishwarya Thu Mar 14, 2013 5:48 pm

தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 4
வாழைப்பழம் - 1 (நறுக்கியது)
மாதுளை விதைகள் - 3 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் - 1 (நறுக்கியது)
அன்னாசி ஜாம் - 1/2 கப்
கருப்பு உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1/2 கப்
ஸ்ட்ராபெர்ரி - 3-4 (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் பிரட் துண்டுகளின் பக்கவாட்டில் உள்ளவற்றை வெட்டி எடுத்துவிட வேண்டும். பின்னர் பிரட்டின் ஒரு பக்கத்தில் வெண்ணெயையும், மறுபக்கத்தில் அன்னாசி ஜாமையும் தடவி, ஒரு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

* வாழைப்பழம், ஆப்பிளை கழுவி வட்டமாக வெட்டி வைக்கவும்.

* பிறகு நறுக்கி வைத்துள்ள வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் மாதுளை விதைகளை, வெண்ணெய் தடவிய பக்கத்தில் அழகாக வைக்க வேண்டும்.

* பின்பு அதன் மேல் கருப்பு உப்பு, சாட் மசாலா மற்றும் மிளகு தூளை தூவ வேண்டும்.

* பின் அந்த பிரட் துண்டுகளை, வரிசையாக அடுக்கி வைத்து, இரண்டாக வெட்டி, ஸ்ட்ராபெர்ரி பழங்களால் அலங்கரித்து வெண்ணை தடவிய பிரட்டால் மூடி பரிமாற வேண்டும்.

* இப்போது அருமையான ஸ்ட்ராபெர்ரி சாண்விட்ச் ரெடி!!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum