தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மோகன்லால் மகன் நடிக்க மறுப்பு

Go down

மோகன்லால் மகன் நடிக்க மறுப்பு  Empty மோகன்லால் மகன் நடிக்க மறுப்பு

Post  ishwarya Thu Mar 14, 2013 3:16 pm

மோகன்லால் மகன் நடிக்க மறுத்துவிட்டதாக இயக்குனர் மேஜர் ரவி கூறினார். தமிழில் நடிகர்களின் வாரிசுகள் ஹீரோக்களாக அறிமுகமாவதுபோல் மலையாளத்திலும் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் உள்ளிட்டவர்கள் ஹீரோக்களாக அறிமுகமாகி உள்ளனர். அந்த வரிசையில் மோகன்லால் மகன் பிரனவ், ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தமிழில் ‘அரண்’ படத்தை இயக்கியவர் மேஜர் ரவி. இவர் இயக்கிய ‘புனர்ஜானி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரனவ் நடித்திருக்கிறார். மேலும் சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த ‘சாகர் அலையஸ் ஜாக்கி’ என்ற படத்திலும் பிரனவ் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்.

அதன் பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கிவிட்டார். மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக அறிமுகமான பிறகு இயக்குனர்கள் பார்வை பிரனவ் பக்கம் திரும்பியது. இந்நிலையில், மேஜர் ரவி இயக்கிய ‘கர்மயோதா’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பிரனவ் பங்கேற்றார். இதையடுத்து ரவி இயக்கத்தில் பிரனவ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மேஜர் கூறும்போது, ‘‘என் படத்தில் பிரனவ் நடிக்கிறாரா என்கிறார்கள். அப்படி எந்த திட்டமும் இல்லை. மேலும் பிரனவிடம் நடிக்க வரும்படி கேட்டபோது, தற்போதைக்கு நடிக்கும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை என்று கூறிவிட்டார்’’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum