தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சன்னியாசி ஆகவில்லை: தனுஸ்ரீ தத்தா

Go down

      சன்னியாசி ஆகவில்லை: தனுஸ்ரீ தத்தா  Empty சன்னியாசி ஆகவில்லை: தனுஸ்ரீ தத்தா

Post  ishwarya Thu Mar 14, 2013 2:04 pm

மும்பை : தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. 2 ஆண்டுக்கு முன் நடிப்பிலிருந்து ஒதுங்கி ஆன்மீகத்தில் ஈடுபட்ட அவர், தலையை மொட்டை அடித்துக்கொண்டார். தற்போது புத்தாண்டுக்காக துபாயில் நடக்கும் விழாவில் நடனம் ஆட உள்ளார். இதற்காக சிறப்பு விக் அணிய உள்ளார். ஆன்மிகத்தில் மூழ்கிவிட்ட அவர் கூறியதாவது:

ஒருமுறை சத்குருவின் யோகா பற்றிய ஆன்மிக புத்தகம் ஒன்றை படித்தேன். வாசிக்கத் தொடங்கியதும் என்னால் அதை கீழே வைக்க முடியவில்லை. படித்து முடிக்க இரண்டரை மணி நேரம் ஆனது. எப்போதும் ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு இருந்தது. ஆனால் அதை தீவிரமாக கடைபிடித்தால் சன்னியாசி ஆகிவிடுவேனோ என்ற பயமும் இருந்தது. பின்னர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டேன். அதில் பல துறவிகளை சந்தித்தப் பிறகே தலையை மொட்டை அடித்துக்கொண்டேன்.

இதைப் பார்த்து எனது அம்மா பயந்தார். கல்யாணம் பண்ணிக்கொண்டு ஜாலியாக வாழ வேண்டிய வயதில் சன்னியாசிபோல் ஆகிவிட்டேனே என்று வருத்தமானார். மொட்டை அடித்துக்கொண்டு என் முகத்தை கண்ணாடியில் பார்த்தபோது பயந்துவிட்டேன். சில நிமிடங்களுக்கு முன் கிளாமராக இருந்தவள், இப்படி இருக்கிறேனே என்று தோன்றியது. பின்னர் தெளிவடைந்தேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்.

யாரால் பாதிக்கப்பட்டேனோ, அவர்கள் என்னைச் சுற்றி இன்னும் இருக்கிறார்கள். இப்போது அவர்களைபற்றி எனக்கு கவலை இல்லை. இப்படிச் சொல்வதால் திருமணம் செய்யாமல் இப்படியே இருப்பேன் என்று எண்ண வேண்டாம். எனக்கு ஏற்றவர் கிடைக்கும்போது திருமணம் செய்வேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum