தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடலில் ‘குடிகார’ நடிகர்

Go down

கடலில் ‘குடிகார’ நடிகர்  Empty கடலில் ‘குடிகார’ நடிகர்

Post  ishwarya Thu Mar 14, 2013 2:02 pm

சென்னை : மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ படத்தில் மலையாள நடிகர், அய்யப்ப பைஜு நடிக்கிறார். மலையாள படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் குடிகாரன் கேரக்டரில் அதிகமாக நடித்து வருபவர் அய்யப்ப பைஜு. நிஜக் குடிகாரர் போலவே யதார்த்தமாக நடிக்கும் பைஜு, கேரளாவில் அதிகம் அறியப்பட்டவர். அவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் குடிகாரனாகவே வருவார். இவர் தமிழில் ரதன் சந்திரசேகர் இயக்கியுள்ள ‘என் பெயர் குமாரசாமி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. அடுத்து மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ படத்தில் குடிகாரனாக நடித்துள்ளார்.

இதுபற்றி அய்யப்ப பைஜு கூறும்போது, ‘‘எழுத்தாளர் ஜெயமோகன் எனது சின்னத்திரை நிகழ்ச்சிகளை அடிக்கடிப் பார்த்துள்ளார். அதன்மூலம் என்னைப் பற்றி இயக்குனர் மணிரத்னத்திடம் தெரிவித்துள்ளார். அவரும் குடிகார கேரக்டருக்கு ஆள் தேடி வந்துள்ளார். இதையடுத்து எனக்கு அழைப்பு வந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. பிறகு வழக்கம்போல எனது குடிகார நடிப்பை இந்தப் படத்திலும் வழங்கியுள்ளேன். அரவிந்த் சாமிக்கு உதவியாளராக நடித்துள்ளேன். இது சின்ன கேரக்டராக இருந்தாலும் எவ்வளவு பெரிய வாய்ப்பு என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்’’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum