கடலில் சிக்கிய அம்மன்
Page 1 of 1
கடலில் சிக்கிய அம்மன்
புதுச்சேரி-கடலூர் நெடுஞ்சாலையில், அரியாங்குப்பத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது, செங்கழுநீர் அம்மன் கோயில். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளியிலிருந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் வரை இந்த அம்மனுக்குத் திருவிழா நடைபெறுகிறது. இதில் ஐந்தாம் வெள்ளியன்று தேர்த் திருவிழா வெகு விமரிசையாக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடத்தப்படுகிறது. தீராத நோய் தீர, பார்வைக் கோளாறு நீங்க, திருமணப்பேறு, குழந்தைப்பேறு வேண்டுவோர் என பலருக்கும் கண்கண்ட தெய்வமாக செங்கழுநீர் அம்மன் விளங்குகிறாள். இந்த அம்மனின் சிலை மரத்தால் ஆனது என்றும் கடலில் மீன் பிடிக்கும்போது வலையில் சிக்கியது என்றும் சொல்லப்படுகிறது. புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து இக்கோயில் அமைந்திருக்கும் வீராம்பட்டினத்திற்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குளச்சல் கடலில் தத்தளித்த படகு… கடலில் கவிழ்ந்த தனுஷ்,அப்புக்குட்டி
» கடலில் மிதக்கும் கவிதைகள்
» கடலில் கண்டெடுத்த புதையல்
» கடலில் ‘குடிகார’ நடிகர்
» பாலிடிக்ஸில் சிக்கிய மதுபானக்கடை
» கடலில் மிதக்கும் கவிதைகள்
» கடலில் கண்டெடுத்த புதையல்
» கடலில் ‘குடிகார’ நடிகர்
» பாலிடிக்ஸில் சிக்கிய மதுபானக்கடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum