சன் டி.டி.ஹெச்சில் 10ம் தேதி வெளியாகிறது விஸ்வரூபம்
Page 1 of 1

சென்னை:கமல் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம்Õ படத்தை ஜனவரி 11ம் தேதி வெளியிடுகிறார். அதற்கு முதல்நாள் 10ம் தேதி இரவு 9.30 மணிக்கு படத்தை டிடிஎச் மூலம் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டுள்ளார். இதற்கு தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேற்று இது தொடர்பாக கமல் பேட்டியளித்தார். அவர்கூறியதாவது:இது உலகிலேயே முதல் முதன் முயற்சி. உலகம் இப்போது நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. சேட்டிலைட் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் இது. தொலைக்காட்சியில் திரைப்படங்களை இலவசமா ஒளிபரப்புகிறார்கள். இது பணம் கொடுத்து பார்ப்பது, இதனால் படைப்பாளிக்கும் பணம் கிடைக்கும், திருட்டு விசிடி, கள்ள சந்தை மூலம் விரயமாகும் பணம் எங்களுக்கே வந்து சேரும். இதுஒருகூட்டு முயற்சி, வியாபாரத்தில் புதிய பரிமாணம்.
என் படத்தை திரையிடாத தியேட்டர்காரர்கள்தான் இதை எதிர்க்கிறார்கள். இதுவரை 390 தியேட்டர்களில் திரையிட ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. யாருக்கும் பங்கம் வரக்கூடாது என்பதற்காக ராஜ்கமல் நிறுவனமே வெளியிடுகிறது. திருடன் கொண்டுபோனாலும் போகட்டும் உடையவனுக்கு ஒரு சதவிகிதம் கூட கிடைக்க கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். இதை பதிவு செய்ய முடியாத நவீன தொழில்நுட்பத்தில் ஒளிபரப்புகிறோம். இடையில் விளம்பரம் இருக்காது. சிலர் பொது இடத்தில் திரையிடுவதாக சொல்லியிருக்கிறார்களாம். அது கடைப்பொருளை கன்னக்கோல் வைத்து திருடுவதற்கு சமம். அதை போலீஸ் பார்த்துக் கொள்ளும்.
விஸ்வரூபம் படம் சன், ஏர்டெல், டிஷ், வீடியோகான். ரிலையன்ஸ் டி.டி.ஹெச்சில் 10ம் தேதி வெளியாகிறது. சிலர் நான் கடனில் இருப்பதாக சொல்கிறார்கள். நான் இதுவரை சொல்லவில்லை. Ôகமல் நல்ல நடிகன்.. அய்யோ பாவம்Õ என்கிறார்கள். என் மீதுள்ள அக்கறையில் சொல்கிறார்கள். ஆனால் நான் ஆடி காரில்தான் வருகிறேன். நெருக்கடி எல்லோருக்கும் வரத்தான் செய்யும், டாட்டாவுக்குகூட நெருக்கடி இருக்கத்தான் செய்யும். அதை சமாளிப்பேன்.
இவ்வாறு கமல் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 10ம் தேதி நீர் பறவை டிரெய்லர்
» இஸ்லாமியர் ஒப்புதலுடன் வெளியாகிறது விஸ்வரூபம்.
» கருப்பை கேன்சர்: 10ம் தேதி மனீஷா கொய்ராலாவுக்கு அமெரிக்காவில் ஆபரேஷன்
» வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது 'கோச்சடையான்'
» அக்டோபர் 19ம் தேதி பிட்சா படம் வெளியாகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum