தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அக்டோபர் 19ம் தேதி பிட்சா படம் வெளியாகிறது

Go down

அக்டோபர் 19ம் தேதி பிட்சா படம் வெளியாகிறது Empty அக்டோபர் 19ம் தேதி பிட்சா படம் வெளியாகிறது

Post  ishwarya Mon Mar 25, 2013 12:55 pm

வெகு நாட்களுக்குப் பிறகு ஆங்கிலப் பெயர் கொண்ட பிட்சா படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதால், இப்படத்தின் தலைப்பை தமிழில் வைப்பது குறித்து கவலைப்படவில்லை தயாரிப்பு வட்டம்.

பொதுவாக தமிழில் பெயர் வைத்து யு சான்றிதழ் பெற்ற படங்களுக்கு பொழுதுபோக்குக்காக வரிச் சலுகை வழங்கப்படும். ஆனால், இப்படத்தை தயாரிக்கும் முன்பே, இது த்ரில்லர் படம் என்பதால் நிச்சயமாக யு சான்றிதழ் கிடைக்காது என்பதால் தான் பிட்சா என ஆங்கில பெயரை வைத்தோம் என்கிறார் தயாரிப்பாளர் குமார்.

மேலும், இப்படத்தின் பெயர் கதையோடு அதிகம் ஒன்றிப் போகிறது. அதாவது, கதைப்படி, ஹீரோ பிட்சா டெலிவரி பாயாக வருகிறார். அவரது வேலை கதையில் மிக முக்கியமான இடம் வகிப்பதால்தான் பிட்சா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

இது மட்டுமல்ல, இதனைத் தொடர்ந்து தற்போது, வேறு சில படங்களும் ஆங்கில தலைப்போடு வெளியாக உள்ளது.

அதாவது, அருண் விஜய் நடித்துள்ள டீல் என்ற படமும் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்த ஆண்டில் ஆங்கிலப் பெயர் கொண்டு வெளியாகும் முதல் படம் பிட்சா என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum