13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்!
Page 1 of 1

ஓசியில் பழங்கள் கொடுத்து 13 வயது சிறுமியை பல முறை பலாத்காரம் செய்த 62 வயது முதியவரை காப்பாற்ற கிராம பஞ்சாயத்து தலைவர் முயன்றது அரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியானாவில் ஏராளமான சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 4 மாதமாக பலாத்காரம் செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது.
அங்குள்ள கெய் கிராமத்தை சேர்ந்தவர் தேவ்ராம். இவருக்கு 3 மகள்கள். மூத்த மகள் பாயல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) 8ம் வகுப்பு மாணவி. 13 வயதான பாயல் திடீரென வயிறு வலிப்பதாக கூறி பள்ளிக்கு போக மறுத்தார். அவளிடம் தாய் விசாரித்தபோது, அவளை பள்ளி அருகே நொறுக்கு தீனி விற்கும் 62 வயது பெரியவர் பலாத்காரம் செய்தது தெரிந்தது. பள்ளி இடைவேளை நேரத்தில் வெளியே வரும் சிறுமி பாயலுக்கு ஓசியில் பழங்கள் கொடுத்து அவளை அந்த பெரியவர் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 4 மாதங்களாக இப்படி அடிக்கடி நடந்ததாக தாயிடம் பாயல் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் அவளது தந்தை தேவ்ராம் புகார் செய்துள்ளார். ஆனால், பஞ்சாயத்து தலைவரோ தனது சாதியை சேர்ந்தவரான பெரியவரை காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்துள்ளார். பாயல் மற்றும் அவரது தந்தையின் கையில் ரூ.35 ஆயிரத்தை பஞ்சாயத்து தலைவர் திணித்து சரிகட்ட முயற்சித்துள்ளார். ஆனால், அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
இதனால் பஞ்சாயத்து தலைவரின் தூண்டுதலின்பேரில் பாயலையும் அவரது 2 தங்கைகளையும் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்து விட்டனர். இதை தொடர்ந்து போலீசில் சிறுமி சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. தேவ்ராம் கேட்டுக்கொண்டதால்தான் பாயல் மற்றும் அவரது தங்கைகளுக்கு பள்ளியில் இருந்து டி.சி தந்ததாக தலைமை ஆசிரியர் கூறினார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் தலையிட்ட அரியானா சமூக நலத்துறை கீதா புஜ்கல், 3 பேரையும் மீண்டும் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளார்.
பலாத்கார புகார் பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குடிபோதையில் 65 வயது மாமியாரை பலாத்காரம் செய்த மருமகன்!
» Published On: Fri, Mar 8th, 2013 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் | By admin 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழடு கைது!
» 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 3 பொண்டாட்டிக்காரன்!
» 90 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்!
» 13 வயது அநாதை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த காம கொடூரர்கள் கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum