தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டி.வி நாடகத்தில் நடிக்கும் ஆசையில் குடும்பத்தை கைவிட துணிந்த இளம் பத்தினி!

Go down

டி.வி நாடகத்தில் நடிக்கும் ஆசையில் குடும்பத்தை கைவிட துணிந்த இளம் பத்தினி! Empty டி.வி நாடகத்தில் நடிக்கும் ஆசையில் குடும்பத்தை கைவிட துணிந்த இளம் பத்தினி!

Post  meenu Wed Mar 13, 2013 6:00 pm



ஒரு அழகான கணவன், மனைவிக்கு 6 வயது மகன் மாத்திரமே இருந்தான். கணவன் கொழும்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் கை நிறைய சம்பளம் வாங்கி வந்தான். அவன் தனது கடும் உழைப்பினால் சொந்தமாக கட்டிய மூன்று அறை வீட்டில் மனைவியுடனும், மகனுடனும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான்.

வீட்டுக்கு தேவையான சலவை இயந்திரம் மற்றும் சமையலுக்கு தேவையான சகல இலத்திரனியல் பொருட்களும் 48 அங்குல தொலைக்காட்சி பெட்டியும், குளிர்சாதனப் பெட்டியும் அந்த வீட்டில் இருந்தன.

அவர்களின் படுக்கை அறைக்கு மாத்திரம் அவன் குளிர்சாதன இயந்திரத்தையும் பொருத்தியிருந்தான்.

அவனது மனைவிக்கு 27 வயதாகும். அவள் நீண்ட தலைமயிருடன் ஒரு கண்கவர் அழகியாக இருந்தாள். எந்த நேரமும் திரைப்படங்களையும் தொலைக்காட்சி நாடகங்களைப் பார்ப்பதிலும் அவள் அலாதி விருப்பம் கொண்டிருந்தாள்.

தன்னுடைய கணவன் மீதும் மகன் மீதும் அந்தப் பெண் உயிரையே வைத்திருந்தாள். இவ்விதம் ஒற்றுமையாக இருந்த அந்தக் குடும்பத்தில் பிரச்சினை உருவாகுவதற்கு ஒரு தொலைக்காட்சி நாடக இயக்குனர் களம் அமைத்துக் கொடுத்தார்.

திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் மீது அலாதி விருப்பம் கொண்டிருந்த அந்த பெண்ணை சந்தித்த தொலைக்காட்சி நாடக இயக்குனர் அவளது அழகைப் பார்த்து மயங்கி, இவளை ஏன் நான் எனது அடுத்த தொலைக்காட்சி நாடகத்தில் கதாநாயகி ஆக்கக் கூடாதென்று நினைத்து அந்தப் பெண்ணை சந்தித்து விடயத்தை தெரிவித்தார்.

தொலைக்காட்சி நாடகத்தில் நடித்து புகழ்பெற வேண்டுமென்ற ஆசையில் இருந்த பெண் தன் கணவனிடமும் கேட்காமல் சரி என்று ஒப்புதல் அளித்துள்ளார். விடயம் அறிந்த கணவர் அந்த யோசனையை முழுமனதுடன் எதிர்த்திருக்கிறார். அதனால் அந்தக் குடும்பத்தில் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டது.

குடும்பத்தில் சமையல் வேலையை முற்றாக நிறுத்திவிட்ட அந்தப் பெண் விரக்தியில் இருந்தவரை போன்று எந்நேரமும் அழுதுகொண்டிருந்தாள். வேறு வழியின்றி கணவன் குடும்பத்தில் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தங்களுக்கு இடையில் சமரசம் செய்ய வேண்டுமென்று பொலிஸாரின் உதவியை நாடினார்.

இருவரையும் விசாரணைக்கு அழைத்த அங்குள்ள அனுபவமிக்க பொலிஸ் உத்தியோகத்தர், அந்த தொலைக்காட்சி டைரக்டரின் உண்மை சொரூபத்தை அந்தப் பெண்ணுக்கு எடுத்துரைத்தார்.

இவன் பெண்களை வலையில் வீழ்த்தி தன்னுடைய ஆசைகளை நிறைவேற்று வதற்காக தொலைக்காட்சி கெமராவுடன் அழகிய பெண்களுக்கு இத்தகைய ஆசை வார்த்தைகளை கூறி மோசடி செய்பவன் என்று அந்த பொலிஸ் அதிகாரி அந்தப் பெண்ணுக்கு புரிய வைத்த போது, அவள் தனக்கு ஏற்படவிருந்த விபரீதத்தில் இருந்து காப்பாற்றிய கணவனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள்.

அதையடுத்து அவ்விருவரும் தனது மகனுடன் மகிழ்ச்சிப் பூரிப்பில் வீடு திரும்பினர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum