சென்னை, மதுரை, கோவையில் ரசிகர்களை சந்திக்க ரஜினிகாந்த் திட்டம் அரசியலில் குதிக்க ஆலோசனை?
Page 1 of 1

ரசிகர்களை நேரில் சந்தித்து பேச ரஜினி முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன. மகள் சவுந்தர்யா திருமணத்தையொட்டி ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சியாக இதை நடத்தினாலும் இச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்கின்றனர்.
ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். கடிதங்களும் அனுப்பி வருகிறார்கள். சந்திப்பின்போது இதுபற்றி பேசப்படலாம் என் எதிர் பார்க்கப்படுகிறது. அரசியலில் ஈடுபடும்படி ரஜினியிடம் நிர்ப்பந்திக்க முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே தி.மு.க. கூட்டணியையும் அ.தி.மு.க. அங்கம் வகித்த பாரதீய ஜனதா கூட்டணியையும் ரஜினி மாறி மாறி ஆதரித்துள்ளார். இதன் மூலம் அரசியல் அனுபவங்கள் அவருக்கு கிடைத்துள்ளன. எனவே அரசியலில் தாராளமாக அவர் ஈடுபடலாம் என்கின்றனர் ரசிகர்கள்.
இரு தினங்களுக்கு முன்பு ரசிகர் மன்ற முக்கியஸ்தர்களையும் தனக்கு நெருக்கமானவர்களையும் ரஜினி சந்தித்து பேசினார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இக் கூட்டம் நடந்தது.
இதில் ரசிகர்கள் சந்திப்பை எப்படி நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் இருக்கக்கூடாது என்றும் கூட்டத்துக்கு வந்து போகும் ரசிகர்கள் பாதுகாப்பும் முக்கியம் என்றும் ரஜினி தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் ஆலோசனைகள் நடந்தது. ஒரே இடத்தில் சந்திப்பை நடத்தாமல் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 ஊர்களில் பிரித்து நடத்தலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வந்து செல்லும் ரசிகர்களுக்கு சிரமம் இருக்காது என கூறப்பட்டதாம். இது ரஜினிக்கு சிறந்த யோசனையாகப்பட்டுள்ளது.
எனவே இந்த 3 ஊர்களிலும் சந்திப்பு இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. “எந்திரன்” பட டிரெய்லர் வெளியீடு நிகழ்ச்சி நாளை நடக்கிறது. அது முடிந்ததும் ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சி நிரல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.
ரசிகர்களை குடும்பத்தோடு அழைப்பதில் நடை முறை சிக்கல் இருப்பதாக ரசிகர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளை அழைத்து வந்தால் அவர் களை ஓட்டலில் தங்க வைப்பது போக்குவரத்து செலவு போன்ற சிரமங்கள் உள்ளன என்றனர். எனவே ரசிகர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஜினி மாவட்டம் தோறும் ரசிகர்களை சந்திக்க முடிவு
» மும்பையில் சந்திக்க விஜய், அஜீத் திட்டம்
» அதிமுகவுக்கு எதிராக ரஜினிகாந்த் ரசிகர்களை வளைக்கும் முயற்சியில் திமுக
» ரசிகர்களை திரட்டி மரக்கன்று நடும் திட்டம்: விஜய், அஜீத், சூர்யாவிடம் ஆதரவு கேட்பேன் – விக்ரம்
» அரசியல்வாதிகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கும் திட்டம் வேண்டும் - அரசிற்கு அமைச்சர் ஆலோசனை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum