இருளில் இருந்து வெளிச்சத்துக்கு...
Page 1 of 1
இருளில் இருந்து வெளிச்சத்துக்கு...
ரஜினி, கமல் நடித்த படங்கள் எதுவும் சென்ற ஆண்டு வெளியாகவில்லை. இந்தக் குறையை போக்குவதற்காகத்தானோ என்னவோ ஒருவர் பாக்கியில் லாமல் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் இந்த ஆண்டு ரிலீசாக இருக்கிறது. முதலிடத்தில் இருப்பது, ‘கோச்சடையான்’. ரஜினி, தீபிகா ப டுகோன், சரத்குமார் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படம், மோஷன் கேப்சரிங் முறையில் எடுக்கப்படும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
அடுத்து உலக தரத்தில் கமல் உருவாக்கியுள்ள ‘விஸ்வரூபம்’. ஆண்ட்ரியா மனைவியாகவும், பூஜா குமார் காதலியாகவும் நடித்துள்ளனர். ரிலீசுக்கு முன்பே படத்தை டி.டி.எச்.சில் வெளியிடும் கமலின் புதிய முயற்சிக்கு எதிர்ப்பும் ஆதரவும் சம அளவில் கிளம்பியிருப்பதால் ஏரியா பரபரப்பாக இருக்கிறது.
மணிரத்னம் இயக்கி வரும் ‘கடல்’, குறிப்பிடத்தகுந்த படமாக தயாராகி வருகிறது. தனது கதையை படமாக எடுக்காமல் தமிழ் இலக்கிய உலகில் முன் னணியில் இருக்கும் ஜெயமோகனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து கதை, வசனம் எழுதச் சொல்லியிருக்கிறார், மணிரத்னம். யெஸ், இப்படத்தில் வெறும் திரைக்கதை இயக்கம் ஆகிய இரு பொறுப்புகளைதான் அவர் ஏற்றிருக்கிறார். இதற்கு முன்பு அவர் அப்படி செய்ததில்லை என்பதாலேயே எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. அத்துடன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஆடியோ வேறு விற்பனையில் சாதனை படைத்திருக்கிறதா... ஹை டெசிபலில் ‘கடல்’ சஞ்சரிக்கிறது. போதும் போதாததற்கு ‘அலைகள் ஓய்வதில்லை’ மூலம் திரையுலகில் அறிமுகமான கார்த்திக், ராதாவின் வாரிசுக ளான கவுதமும், துளசியும் இப்படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இதுதான் முதல் படம். இப்படி டஜன் கணக்கான ‘ஃப்ளேவரு’டன் ரசிகர்களை ஆட்கொள்ள வருகிறது, ‘கடல்’.
கிட்டத்தட்ட இதே நிலைதான் பாலாவின் ‘பரதேசி’க்கும். கலப்படமில்லாத டிகிரி சுத்தமான பாலாவின் பிராண்ட். ‘எரியும் பனிக்காடு’ நாவலைத் தழுவி எ டுக்கப்பட்டுள்ள இந்தப் படம், அதர்வாவை முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைக்கும் என அடித்துச் சொல்கிறார்கள்.
தொடர் ஹிட்டுக்களை கொடுத்து வரும் இயக்குநர் ஷங்கரின் அடுத்த படம், ‘ஐ’. விக்ரம், எமிஜாக்சன் நடிக்கும் இப்படம் குறித்த தகவல்கள் வழக்கம்போல ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஷங்கர் இயக்கும் முதல் க்ரைம் திரில்லர் படம் இதுதான் என்கிறார்கள். இப்படம் தவிர, ‘டேவிட்’ படத்தி லும் விக்ரம் நடித்து வருகிறார்.
சூர்யா நடிப்பில் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்த ‘சிங்கம்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘சிங்கம் 2’ தயாராகி வருகிறது. ஹரி இயக்கும் இப்படத்திலும் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிப்பதால்தான் படத்துக்கு இந்தப் பெயரை வைத்துள்ளார்களாம். மற்றபடி ‘சிங்க’த்துக்கும் இதற்கும் தொடர்பில்லையாம். அனுஷ்கா, ஹன்சிகா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் இப்படம் நிச்சயம் பரபர ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.எல்.விஜய் இயக்க, விஜய் நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அமலாபால் ஹீரோயின். அதே போல் அஜீத் நடிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்துக்கும் இன்னும் நாமகரணம் சூட்டகவில்லை. இந்தப் படத்தில் ‘தல’க்கு ஜோடி நயன்தாரா. இந்த இரு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது.
கார்த்தி நடிப்பில் ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘பிரியாணி’ என இரு படங்கள் இந்தாண்டு ரிலீசாகும். கார்த்தியின் தடதட வேகத்துக்கு ‘சகுனி’ போட்ட சின்ன ஸ்பீட் பிரேக்கை இவ்விரு படங்களும் தகர்க்கும் என்கிறார்கள்.
தனுஷ் நடித்து வரும் ‘மரியான்’, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என கிசுகிசுக்கிறார்கள். காரணம், இப்படத்தை இயக்கும் பரத் பாலா.
ஏ.ஆர்.ரகுமானின் நண்பரான இவர், இப்படத்தை தமிழகத்தில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவது போல் கதை அமைத்திருக்கிறார். மரியான் என் றால் இறப்பு இல்லாதவன் என்று பொருள். இதில் மீனவராக நடிக்கிறார் தனுஷ். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ‘பூ’ பார்வதி.
அமீரின் ‘ஆதிபகவன்’, சமுத்திரகனியின் ‘நிமிர்ந்து நில்’, ‘பூலோகம்’ என பிரகாசமான நாட்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார் ஜெயம் ரவி.
‘என்றென்றும் புன்னகை’, ‘டேவிட்’ என ஜீவாவின் கால்ஷீட்டும் ஃபுல். இதுபோக ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து இவர் நடிக்கும் படமும் சதமடிக்க காத்திருக்கிறது.
சிம்பு நடிப்பில் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’, ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’, சசி இயக்கத்தில் பரத் நடிக்கும் ‘555’, எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’, யுடிவியின் ‘சேட்டை’, விஷால் நடிக்கும் ‘சமர்’, ‘மத கஜ ராஜா’ என வரிசையாக பாக்ஸ் ஆபீசை குறிவைத்து படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வழக்கம் போல் இந்தப் பட்டியலில் இல்லாத புதுமுக இயக்குநர்களின் படங்கள் புயல் மாதிரி இன்டஸ்டிரியை புரட்டிப் போடவும் செய்யலாம்.
எது எப்படி இருந்தாலும் மூச்சு விட முடியாமல் சிரமப்படும் தமிழ்ச் சினிமா, இந்த ஆண்டு வீறு நடை போடும் என்பது மட்டும் உறுதி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தனிமைப்புலம்பல் இருளில் அமர்ந்திருக்கும் மனிதருக்கு...
» வெளிச்சத்துக்கு வாருங்கள்
» வெளிச்சத்துக்கு வந்த இருட்டறை
» பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்க
» முதுகுவலியில் இருந்து விடுபட...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum