முதுகுவலியில் இருந்து விடுபட...
Page 1 of 1
முதுகுவலியில் இருந்து விடுபட...
சென்னை போன்ற பெருநகரங்களில் கணினி முன் அமர்ந்து பல மணி நேரம் வேலை பார்ப்பது என்பது தகவல் தொழில்நுட்பம் பெருகி விட்ட இன்றைய கால கட்டத்தில், இன்றியமையாததாகி விட்டது எனலாம்.
வசதியான கட்டமைப்புகளுக்காக பெரும்பாலான ஐ.டி. அலுவலகங்கள் ஊருக்கு பல கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளன.
இதனால் பெரும்பாலான பணியாளர்கள் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் வாகனப் போக்குவரத்துக்கு பெருநகரங்களில் பஞ்சமே இல்லை.
இருசக்கர வாகன பயணம், கணினி முன் கண் அசையாமல் பணி என பல காரணங்களினால் முதுகு வலி, கழுத்து வலி ஏற்படும் வாய்ப்புகள் பெருகி விட்டன.
கழுத்தையும், முதுகையும் சரிவர பேணாத நிலையில், முதுமையை அடைவதற்கு முன்பே கழுத்து மற்றும் முதுகை இணைக்கும் டிஸ்க் எனப்படும் இணைப்பு எலும்புகள் விரைவில் தேய்ந்து விடுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.
எலும்புகள் தேய்ந்து இவற்றுக்கு நடுவே வெளியேறும் நரம்புகள் அழுத்தப்படும் போது கை கால்கள் மரத்துப் போகின்றன; கழுத்து வலியும், முதுகு வலியும் தாங்க முடியாத அளவுக்கு ஏற்படுகிறது.
முதுகு வலிப் பிரச்னைக்கு மாத்திரைகள், ஊசி மூலம் தீர்வு காணப்படும் அதே நேரத்தில், கட்டுப்படாத முதுகுவலி, கழுத்து வலிக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.
அறுவை சிகிச்சையையும் மீறி தண்டுவட அழுத்தத்தைக் குறைக்கக் கூடிய நவீன சிகிச்சை முறைகள் தற்போது வந்து விட்டன.
எனவே அவரவர் வலிகளின் தன்மையைப் பொருத்து உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரை 20 கிலோ மீட்டருக்கு மேல் அன்றாடம் இருசக்கர வாகனப் பயணத்தைத் தவிர்க்கப் பாருங்கள். பேருந்து அல்லது ரயில் வசதி இருப்பின் அந்தவகை போக்குவரத்தை மேற்கொள்ளுங்கள்.
வலி என்று வந்து விட்டால், தாமதப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகுவதே உடனடி நிவாரணத்திற்கு ஏற்றது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஞாபக மறதியில் இருந்து விடுபட..
» ஞாபக மறதியில் இருந்து விடுபட..
» ஓரின சேர்க்கையில் இருந்து விடுபட வழி உண்டா?
» பிரச்சினையில் இருந்து சஞ்சய் தத் விடுபட வேண்டும் ரஜினிகாந்த் அறிக்கை
» இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட விட்டமின்-சி சிறந்த மருந்து.- ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum