தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனுஷ்காவின் ஆக்ஷன் அனுபவம்

Go down

அனுஷ்காவின் ஆக்ஷன் அனுபவம்  Empty அனுஷ்காவின் ஆக்ஷன் அனுபவம்

Post  ishwarya Wed Mar 13, 2013 5:09 pm

சென்னை: ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்று அனுஷ்கா கூறினார். கார்த்தி, அனுஷ்கா நடித்துள்ள படம், ‘அலெக்ஸ் பாண்டியன்’. சுராஜ் இயக்கி உள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ ஸ்கீரின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். வரும் 12-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. படத்தில் நடித்தது பற்றி அனுஷ்கா கூறியதாவது: இது சூப்பரான கமர்சியல் படம். இந்தப் படத்தின் கதையை சுராஜ் என்னிடம் சொன்னபோது அதில் இருந்த காமெடி காட்சிகளுக்காகவே நடிக்க முடிவு செய்தேன். இதில் காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ் எல்லாம் சரிவிகிதத்தில் இருக்கிறது. இந்தப் படத்தில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் காட்சிகளும் அதிகமாக உள்ளன. ஆக்ஷன் மற்றும் காமெடி காட்சிகளில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. படத்தில் அதிர வைக்கும் ரயில் சண்டைக்காட்சி இருக்கிறது. இதில் டூப் இல்லாமல் நானும் கார்த்தியும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளோம். இது எனக்கு மறக்க முடியாத அனுபவம். சந்தானம் மற்றும் மனோபாலாவுடன் நடிக்கும்போது பல காட்சிகள் கணக்கில்லாமல் ரீடேக் போனது. காரணம் சிரிப்பை என்னால் கட்டுபடுத்த முடியாமல் போனதுதான். இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum