தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கர்நாடகம் சம்மதம்

Go down

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கர்நாடகம் சம்மதம் Empty தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கர்நாடகம் சம்மதம்

Post  birundha Thu Jan 17, 2013 1:42 pm

தமிழ்நாட்டுக்கு இந்த மாதம் 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை, காவிரியில் நிமிடத்துக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் அதாவது ஒரு நாளில் ஏறக்குறைய 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடத் தயார் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
வரும் 19-ம் தேதி, பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் இந்தப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க உள்ள நிலையில், கர்நாடக அரசு இந்த முடிவைத் தெரிவித்திருக்கிறது. அதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
அதே நேரத்தில், காவிரி நதிநீர் ஆணையம் ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புவதாக நீதிபதிகள் டி.கே. ஜெயின் மற்றும் மதன் லோகுர் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
காவிரி ஆணையம் கூடாவிட்டாலோ அல்லது முடிவு காணாவிட்டாலோ, இரண்டு மாநிலங்களும் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு மேல் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
அதனால், வழக்கமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர் இந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் கூடி, பற்றாக்குறை காலங்களில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பாக, காவிரி கண்காணிப்புக் குழு வகுத்த நெறிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரி்க்கை விடுத்தார்.
அதுதொடர்பாக நடவடிக்கை இல்லாததால், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. காவிரி ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட அரசுக்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியது.
அதையடுத்து, ஆணையத்தை கூட்டும் தேதியை விரைவில் முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 19-ம் தேதி ஆணையத்தைக் கூட்ட அரசு முடிவு செய்துள்ளது.
அதே நேரத்தில், காவிரி ஆணையம் முடிவெடுக்கும் வரை தினசரி 2 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கூடுதல் மனு ஒன்றையும் தாக்கல் செய்தது.
அது குறித்து கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், குறைந்தபட்சம், நாளொன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீராவது தர முடியுமா என்ற சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுத்தியது.
அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்துக்கு தண்ணீர் தருவது தற்போதைய நிலையில் சாத்தியமில்லை என கர்நாடக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கர்நாடக அரசு செப்டம்பர் 6-ம் தேதி நிலவரப்படி 18 சதம் தண்ணீரை மட்டுமே தமிழகத்துக்கு விடுவித்திருப்பதாகவும், மீதமுள்ள 82 சத நீரை கர்நாடகம்தான் பயன்படுத்துதாகவும் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்திநாதன் சுட்டிக்கட்டினார்.. தற்போதைய நிலையில், கர்நாடக அணைகளில் 90 டிஎம்சி தண்ணீர் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது கர்நாடக அரசு தர சம்மதித்துள்ள தண்ணீரின் அளவு, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த ஒரு டிஎம்சி அளவைவிட சற்று குறைவாக இருக்கும் என்று சி.எஸ். வைத்தியநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆறு குவளை (1 1/2 லிட்டர்) தண்ணீர் செய்யும் அற்புதங்கள் தண்ணீர் சிகிச்சை (Water therapy)
» இலவச பொருட்களை வழங்க மாணவர்களிடம் பணம் வசூல் செய்த தலைமை ஆசிரியர் திங்கள்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். சிதம்பரம் வட்டம் புதுசத்திரம் அருகே சாமியார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன். இவர் மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்க ரூ.10
» கர்நாடகம், ஆந்திரத்தில் திரையிடப்பட்டது விஸ்வரூபம்
» தண்ணீர் தண்ணீர தண்ணீர்
» எம்மதமும் சம்மதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum