எம்மதமும் சம்மதம்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
எம்மதமும் சம்மதம்
மசூதியில் தங்கியிருந்தாலும், முஸ்லிம் சாதுபோல் உடை அணிந்திருந்தாலும் பாபா தாம் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர் என்று ஒருபோதும் யாரிடமும் சொன்னதில்லை. எல்லா மதமும் அவருக்குச் சம்மதமாகவே இருந்தது. அதனால் தான் `சாய்பாபா அஷ்டோத்திர சத நாமாவளி' அவரை, ``சர்வமத சம்மதாய நம'' என்று போற்றித் துதி செய்கிறது.
சாதியைச் சொல்லியோ, சமயத்தைச் சொல்லியோ அவர் ஒருபோதும் யாரையும் வெறுக்கவில்லை. அனைத்து சமயத்தினரிடையிலும் ஒற்றுமையை உண்டாக்கும் வகையிலேயே பாபாவின் சொல்லும் செயலும் அமைந்திருந்தன. என் குரு வெங்கூசா என்று பாபாவால் அன்போடு குறிப்பிடப்பட்ட ஜமீன்தார் கோபால்ராவ் தேஷ்முக்குடன் பாபா பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார்.
அப்போது, அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. பாடங்கள் கற்கவில்லை. குருநாதர் வெங்கூசாவும் பாபாவுக்கு எத்தகைய உபதேசமும் செய்யவில்லை. அப்படி இருந்தும் இந்து சமயம் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் பாபா அறிந்திருந்தார்.
பள்ளிக்குச் செல்லாத பாபா, குருவிடம் எதுவும் கல்லாத பாபா, பிற்காலத்தில் பாகவத்திலிருந்தும் பகவத் கீதையிலிருந்தும் இராமாயணத்தில் இருந்தும் மகாபாரதத்தில் இருந்து இன்னும் பல நூல்களில் இருந்தும் மேற்கோள்கள் எடுத்துக் காட்டித் தம் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
வடமொழிச் சுலோகங்களை வரிக்குவரி பிரித்து, விளக்கங்கள் கொடுத்தும், விரிவுரை தந்தும் தம் பக்தர்களின் சந்தேகங்களை அறவே நீக்கினார். யார் எதைப் படித்தால் நற்பலன்களை பெறலாம் என்றும் அறிவுரை வழங்கினார். அவர், இந்துக்கள் செய்த வழிபாடுகளை மறுக்காமல் மகிழ்ச்சியாய் ஏற்றுக் கொண்டார், சந்தனம் பூசப்பட்டதை ஏற்றுக் கொண்டார்.
மாலைகள் போடுவதைத் தடுக்கவில்லை. அதுமட்டுமா இந்துக்களின் விழாவான ராமநவமி, கோகுலாஷ்டமி ஆகியவற்றை சிறப்பாக கொண்டாடச் செய்தார். அதில் ஒரு சிறப்பு என்னவென்றால் ராமநவமியைக் கொண்டாடும் அதே நாளிலேயே முஸ்லிம் ஞானிகளை கவுரவிக்கும் உரூஸ் விழாவையும் கொண்டாடச் செய்தார்.
பாபா, தாம் இருப்பிடமாய்க் கொண்டிருந்த மசூதிக்கு `துவாரகமாயீ' என்று பெயர் சூட்டினார். அங்கே அவர் தம் யோக சக்தியால் `துனி' எனப்படும் அக்னி குண்டத்தை உருவாக்கி அதில் உருவாகும் சாம்பலை `ஊதி' என்று கூறினார். அந்த `ஊதி'யை விபூதியாக கருதித் தன்மை நாடிவந்த நோயாளிகளுக்கு வழங்கி அவர்களுடைய நோய்களை போக்கினார்.
இந்துக்களை போல பார்சிகளும் அக்னியை வழிபடுபவர்கள். அதனால், மசூதியில் அக்கினி குண்டத்தை உருவாக்கி, அக்கினிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்த சாய்பாபாவைப் பார்சிகளும் தேடிவந்து வழிபட்டார்கள்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» எம்மதமும் சம்மதமே!
» எம்மதமும் சம்மதமே!
» எம்மதமும் சம்மதமே!
» எம்மதமும் சம்மதமே!
» தியேட்டர்காரர்களுக்கு ரூ.6 கோடி தர விஜய் சம்மதம்?
» எம்மதமும் சம்மதமே!
» எம்மதமும் சம்மதமே!
» எம்மதமும் சம்மதமே!
» தியேட்டர்காரர்களுக்கு ரூ.6 கோடி தர விஜய் சம்மதம்?
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum