தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுவேதா மேனன் பட ஷூட்டிங் தாமதம் ஏன்?

Go down

சுவேதா மேனன் பட ஷூட்டிங் தாமதம் ஏன்?  Empty சுவேதா மேனன் பட ஷூட்டிங் தாமதம் ஏன்?

Post  ishwarya Wed Mar 13, 2013 2:33 pm

சுவேதா மேனன் குழந்தை பிறப்பு காட்சியை படமாக்கியதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதா என்பதற்கு பதில் அளித்தார் இயக்குனர். ‘அரவான்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் சுவேதா மேனன். மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். அடுத்து பிளஸ்ஸி இயக்கும் ‘களிமண்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த பட ஷூட்டிங்கின்போது கர்ப்பமாக இருந்தார் சுவேதா மேனன். அவரது பிரசவ காட்சியை தத்ரூபமாக இயக்குனர் படமாக்கினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. சில சமூக அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது.

விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இதுபற்றி இயக்குனர் பிளஸ்ஸி கூறும்போது, ‘‘குழந்தை பிறந்தவுடன் சுவேதா மேனன் எடை கூடிவிட்டார். கர்ப்பமாவதற்கு முன்பு மெலிந்த தோற்றத்தில் இருப்பது போன்ற காட்சியில் சுவேதா மேனன் நடிக்க வேண்டி இருக்கிறது. அவர் உடல் மெலிவதற்காக அவகாசம் தந்து காத்திருக்கிறது பட குழு. தற்போது உடல் எடையை குறைத்திருக்கிறார். ‘இப்படத்துக்கு என்னென்ன காட்சிகள் படமாக்க உள்ளீர்கள்’ என்று கேட்கிறார்கள். அதை பட ஷூட்டிங் முடியும் வரை சொல்ல முடியாது. இன்னும் 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளது. ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவை பற்றிய கதைதான் கரு. இதில் பிஜ மேனன் ஹீரோ. விரைவில் மீண்டும் ஷூட்டிங் தொடங்க உள்ளது’’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum