தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியாக நடிக்க தடைகளை உடைத்தேன் : சுவேதா மேனன்

Go down

திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியாக நடிக்க தடைகளை உடைத்தேன் : சுவேதா மேனன்  Empty திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியாக நடிக்க தடைகளை உடைத்தேன் : சுவேதா மேனன்

Post  ishwarya Tue Mar 12, 2013 11:38 am

சென்னை: ‘திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியாக நடிக்க ஏற்பட்ட தடைகளை உடைத்திருக்கிறேன்Õ என்றார் சுவேதா மேனன்.‘அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சுவேதா மேனன். மோகன்லால் நடிக்கும் ‘களிமண் மலையாள படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்துக்காக தான் குழந்தை பெற்ற காட்சியை படமாக்க அவர் அனுமதித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைக்கு சபைனா என பெயரிட்டிருக்கிறார். தற்போது மும்பையில் நடக்கும் படப்பிடிப்பில் குழந்தையுடன் பிஸியாக நடித்து வருகிறார்.

சுவேதா மேனன் கூறியது: இப்போதுள்ள சமூக சூழலில் ஒரு அம்மாவாக எனது குழந்தையை எப்படி வளர்ப்பது என்று தெரியவில்லை. இதனால் குழந்தை வளர்க்கும் தாய்மார்களிடம் கலந்துரையாடி தெரிந்துகொள்கிறேன். பாலியல் பற்றி இருபாலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிரசவ காட்சியை நான் படமாக்க அனுமதித்தது குறித்து சர்ச்சை கிளப்புகிறார்கள். இப்படத்தில் இரண்டரை மணி நேரமும் இக்காட்சி இடம்பெறபோவதில்லை. மனித உணர்வுகளை மையப்படுத்தி கதையை உருவாக்கி வருகிறார் இயக்குனர் பிளஸ்சி. நல்லதொரு பாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார். என் மகள் பிறக்கும்போதே நடிகையாக பிறந்திருக்கிறாள். இப்போது இருவரும் பிஸியாக படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கிறோம். என்னுடன் குழந்தை பேசுவதுபோன்ற காட்சிக்காக அனிமேஷன் வடிவமைக்கப்படுகிறது. குழந்தை பிறந்துவிட்டதால் நான் ஏற்கும் வேடங்களில் வரைமுறை வகுத்துக்கொள்ளவில்லை. கவர்ச்சியாக நடிப்பதற்கான தடையை சற்று கூடுதலாகவே உடைத்திருக்கிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum