காமெடி ஹீரோவாக நடிக்க தயார்
Page 1 of 1
காமெடி ஹீரோவாக நடிக்க தயார்
சென்னை : ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ படத்தில் அறிமுகமான சத்யனுக்கு ‘ஒன்பதுல குரு’ 50வது படம். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அப்பா தயாரித்த படத்தில் அறிமுகமாகி, இன்று சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். ‘இளையவன்’, ‘கண்ணா உன்னை தேடுகிறேன்’ படங்களில் ஹீரோவாக நடித்தேன். அதை என் குடும்பத்தினர் மட்டுமே பார்த்தார்கள். ரசிகர்கள் பார்க்கவில்லை. ஹீரோவாக நடிப்பது சரிப்பட்டு வராது என்று, ‘முத்தம்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தேன்.
‘நண்பன்’, ‘துப்பாக்கி’ படங்கள் திருப்புமுனை தந்தது. ‘ஒன்பதுல குரு’ 50வது படம். இதுவரை நான் நடித்த படங்களிலேயே எனக்கு மிகப் பெரிய கேரக்டர் கிடைத்துள்ளது. எனக்குள் மறைந்திருந்த காமெடியை இயக்குனர் பி.டி.செல்வகுமார் முழுமையாக வெளியே கொண்டு வந்திருக்கிறார்.
இரட்டை அர்த்த வசனம் பேசுவதையும், கருப்பான பெண்கள் மற்றும் திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்வது மாதிரியான படங்களையும் தவிர்த்து விடுகிறேன். நல்ல காமெடி என்பது, சக மனிதனை மதிப்பதாக இருக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் நானும் சில படங்களில் அப்படி நடித்துள்ளேன். இனி அப்படி நடிக்காமல் கவனமாக இருப்பேன். தற்போது 10 படங்களில் நடிக்கிறேன். மீண்டும் ஹீரோவாக நடிக்க கேட்கிறார்கள். அப்படியே நடித்தாலும், நல்ல காமெடி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். பஞ்ச் டயலாக் பேசி, தயாரிப்பாளர்களை பஞ்சராக்க மாட்டேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹீரோவாக நடிக்க மாட்டேன்: ஜான் விஜய்
» தனுஷுடன் நடிக்கத் தயார் – சிம்பு
» மீண்டும் ரேகாவுடன் நடிக்க தயார் : அமிதாப்
» கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார்: ஸ்வாதி!
» நிர்வாணமாக நடிக்க தயார் என்கிறார் பத்மப்ரியா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum