தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபுதேவாவுக்கு நிர்பந்தம் தரும் பாலிவுட் ஹீரோக்கள்

Go down

பிரபுதேவாவுக்கு நிர்பந்தம் தரும் பாலிவுட் ஹீரோக்கள்  Empty பிரபுதேவாவுக்கு நிர்பந்தம் தரும் பாலிவுட் ஹீரோக்கள்

Post  ishwarya Wed Mar 13, 2013 2:13 pm

‘ஆக்ஷன் படங்கள் இயக்க கேட்டு பாலிவுட் ஹீரோக்கள் நிர்பந்திக்கிறார்கள்’ என்றார் பிரபு தேவா. தமிழில் விஜய் நடித்த ‘போக்கிரி’ படத்தை இந்தியில் ‘வான்டட்’ என்ற பெயரில் இயக்கினார் பிரபுதேவா. சல்மான்கான் ஹீரோவாக நடித்தார். படம் ஹிட் ஆனது. இதையடுத்து ‘சிறுத்தை’ என்ற படத்தை ‘ரவுடி ரத்தோர்’ என இந்தியில் ரீமேக் செய்தார். இதில் அக்ஷய்குமார் நடித்தார். இப்படமும் ஹிட் ஆனது. இதையடுத்து பிரபுதேவாவுக்கு பாலிவுட் படங்களை இயக்க வாய்ப்பு குவிந்தது.
இதுபற்றி அவர் கூறியதாவது: எல்லோரும் என்னை ஆக்ஷன் படங்கள் இயக்க கேட்கிறார்கள். இதன் மூலம் எனக்கு நிறைய வரவேற்பு இருப்பது உண்மைதான்.

ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் விரும்புகிறார்கள் அதற்காக இன்னும் சில படங்கள் இயக்கலாம். ஆனால் மற்ற பாணியிலான படங்கள் இயக்க வேண்டும் என்பது என் ஆசை. மசாலா கலந்த ஆக்ஷன் படங்களை எவ்வளவு நாள் ரசிப்பார்கள் என்பது தெரியாது. இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாமல் கேட்டதை இயக்கிக் கொடுக்கிறேன். ஆக்ஷன் படங்களில் புதிய கருத்து சொல்வது கடினம். ஆனாலும் என்னால் என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியுமோ அதை செய்து தருகிறேன். இதற்கு உதவ எழுத்தாளர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இருக்கிறார்கள். அதேநேரம் வித்தியாசமான கதை அம்சமுள்ள படங்களையும் ரசிக்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum