நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: மத்திய அரசு மீது சி.பி.ஐ., கடும் குற்றச்சாட்டு
Page 1 of 1

புதுடில்லி : நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு மீது, சி.பி.ஐ., பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டை, மத்திய அரசு மறுத்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, சில மாதங்களுக்கு முன், புகார் எழுந்தது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சமூக நல ஆர்வலர்கள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிபதி, ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச் முன், தன் அறிக்கையை, சி.பி.ஐ., தாக்கல் செய்தது.
அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், முதல் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில், குறிப்பாக, 2006-09க்கு இடைப்பட்ட காலத்தில், ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள், தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.இந்த நிறுவனங்களுக்கு சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதற்கு முன், அவற்றின் நம்பகத் தன்மை குறித்து, மத்திய அரசு, எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிறுவனங்கள், தவறான தகவல்களை கொடுத்து, உரிமங்களை பெற்றுள்ளன.
இந்த விஷயத்தில், அரசு அதிகரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களை, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம். ஒதுக்கீடு உரிமம் பெற்ற, ஒவ்வொரு நிறுவனத்தை பற்றியும், விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சி.பி.ஐ.,யின் இந்த குற்றச்சாட்டுக்கு, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், வாகனவதி, கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:இந்த விவகாரத்தில், சி.பி.ஐ.,யின் கருத்தை, இறுதியானது என, கூற முடியாது. நிலக்கரி ஒதுக்கீடு குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்துவதில், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதேநேரத்தில், இந்த விசாரணை குறித்த சில ஆவணங்களை, சி.பி.ஐ., எங்களுக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு, வாகனவதி கூறினார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான, சி.பி.ஐ., விசாரணை குறித்து, அரசு சார்பில் தெரிவிக்கப்படும் கருத்து, விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்க கூடாது. இந்த விஷயத்தில், மத்திய அரசு, கவனமாக இருக்க வேண்டும்.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுக்காக, தகுதியுடைய பல பெரிய நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தபோது, சிறிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு வழங்கியது ஏன் என்பதை, அரசு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நிலக்கரி சுரங்க ஊழல்: சி.பி.ஐ. அறிக்கையை வாகன்வாதி திருத்தினார்

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைவில் தொடரும் மர்மம்! மத்திய அரசு மீது பேத்தி புகார்!
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
» மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம்: உமாபாரதி குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum