நிலக்கரி சுரங்க ஊழல்: சி.பி.ஐ. அறிக்கையை வாகன்வாதி திருத்தினார்
Page 1 of 1

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் நடந்து வருகிறது.
இதில் சி.பி.ஐ. நடத்திய விசாரணை தகவல்கள் அடங்கிய அறிக்கை கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சி.பி.ஐ.யின் அறிக்கை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப் படுவதற்கு முன்பு மத்திய சட்ட மந்திரி, மத்திய நிலக்கரி துறை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் 2 அதிகாரிகளிடம் காட்டப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. அவர்கள் அந்த அறிக்கையில் பல திருத்தங்கள் செய்ததாக கூறப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்த நிகழ்வால் சி.பி.ஐ. நம்பகத்தன்மையை இழந்து விட்டதாக சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு சி.பி.ஐ. அறிக்கையை யார், யாரெல்லாம் பார்த்தார்கள்? என்னென்ன திருத்தங்களை அவர்கள் செய்தார்கள்? என்பதை விளக்கி புதிய அறிக்கையை 6-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே சி.பி.ஐ.யின் விசாரணை அறிக்கையை திருத்தியது யார் என்ற சர்ச்சை அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலான வாகன்வாதி-தான் சி.பி.ஐ. அறிக்கையில் திருத்தங்கள் செய்தார் என்று ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
சி.பி.ஐ. விசாரணை அறிக்கையை வாங்கிப் பார்த்த அவர், அதில் பல இடங்களில் தன் கைப்பட மாற்றம் செய்து குறிப்புகள் எழுதியதாக கூறப்படுகிறது. ஆனால் யார் உத்தரவின் பேரில் அவர் இந்த திருத்தங்களை செய்தார் என்று தெரியவில்லை.
சி.பி.ஐ. அறிக்கையில் மத்திய அரசு அதிகாரிகள் திருத்தங்கள் செய்து இருப்பது உறுதியாகி இருப்பதால் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து அரசியல் வாதிகள் தப்பிக்க, சில அதிகாரிகள் பலிகடா ஆக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
இந்த விவகாரத்தில் முதல் பலிகடா ஆகி இருப்பவர் கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஹரேன்ராவல் ஆவார். இவர் சி.பி.ஐ. அறிக்கையை யாரிடமும் காட்டவில்லை என்று கோர்ட்டில் கூறி சர்ச்சையில் சிக்கி பதவியை பறிகொடுத்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து மேலும் சிலர் பதவி விலகுவார்கள் என்று கூறப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நிலக்கரி சுரங்க ஊழல்: சி.பி.ஐ. அறிக்கையை வாகன்வாதி திருத்தினார்
» நிலக்கரி ஊழல்: 6-ந்தேதிக்குள் புதிய அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: மத்திய அரசு மீது சி.பி.ஐ., கடும் குற்றச்சாட்டு
» நிலக்கரி ஊழல் விவகாரம்: சட்ட மந்திரி அஸ்வனி குமாருடன் பிரதமர் சந்திப்பு
» சூடான் தங்கச் சுரங்க விபத்தில் 60 பேர் பலி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum