விஸ்வரூபம் படத்தில் ஒரு மணி நேர காட்சிகளை நீக்க கோரி அரசு அதிகாரிகள் வலியுறுத்தல்?
Page 1 of 1

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான வழக்குகள் சேன்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிமன்ற அறிவுறுத்தல் படி கமல் தரப்பும், அரசு அதிகாரிகள் தரப்பும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது 1 மணி நேரம் ஓடக் கூடிய காட்சிகளை நீக்குமாறு அரசு அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும், அதற்கு கமல் தரப்பு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது. விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக சுமுக தீர்வு காணுங்கள் என்று கமலுக்கு நீதிபதி அறிவுரை கூறியுள்ளார். வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து படத்துக்கு 15 நாள் அரசு தடை விதித்தது. இதை நீக்க கோரி உயர்நீதிமன்றத்தில் ராஜ்கமல் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. வழக்கை நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரித்தார். படத்தை பார்த்து முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். 26ம் தேதி படத்தை பார்த்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. கமல் சார்பாக மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், முஸ்லிம் அமைப்புகள் சார்பாக வக்கீல்கள் சங்கரசுப்பு, ரமேஷ் ஆகியோர் ஆஜராயினர். தடை காரணமாக தயாரிப்பாளருக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே வழக்கை விரைவாக விசாரித்து படத்தை திரையிட அனுமதி கொடுக்க வேண்டும் என கமல் வக்கீல் பி.எஸ்.ராமன் கூறினார்.
இதையடுத்து நீதிபதி, ''விஸ்வரூபம் படத்தை பார்த்தேன். இந்த வழக்கில் புதிய மனு தாக்கல் செய்ய விரும்பினால் புதிய மனு தாக்கல் செய்யுங்கள். இதன் மீது நாளை விசாரிக்கிறேன். நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமைதான் முக்கியம். கமல் சென்னை வந்துவிட்டார் என்று கருதுகிறேன். எனவே சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி சுமுக தீர்வு காண முயற்சிக்க வேண்டும். விசாரணையை 29க்கு தள்ளிவைக்கிறேன்'' என்றார்.
இந்நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தல் படி கமல் தரப்பும், அரசு அதிகாரிகள் தரப்பும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது 1 மணி நேரம் ஓடக் கூடிய காட்சிகளை நீக்குமாறு அரசு அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும், அதற்கு கமல் தரப்பு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கமல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நடக்கும் விசாரணையின் முடிவுக்கு பிறகு விஸ்வரூபம் திரைப்படம் திரைக்கு வருமா? வராதா? என்பது தெரிய வரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம்… சர்ச்சைக் காட்சிகளை நீக்க கமல் சம்மதம்?
» குர்ஆன் தொடர்பான காட்சிகளை நீக்க கமல் சம்மதம்

» விஸ்வரூபம் பட விவகாரம்: கமல்ஹாசனிடம் விசாரணை நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
» நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் சில காட்சிகளை காணோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum