குர்ஆன் தொடர்பான காட்சிகளை நீக்க கமல் சம்மதம்
Page 1 of 1

சென்னை : காங்கிரஸ் எம்.பி, ஜே.எம்.ஆருண், தேசிய லீக் கட்சித் தலைவர் பஷீர் அகமது உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் சிலர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது: எனது இஸ்லாமிய சகோதரர்கள் என்னை சந்தித்தார்கள். படத்தில் குர்ஆன் சம்பந்தப்பட்ட சில காட்சிகளையும் வேறு ஒரு காட்சியையும் நீக்க வேண்டும் என்று கூறினார்கள். அந்த காட்சிகள் அவர்கள் மனதை புண்படுத்துவதாக இருந்தால் அதை நீக்கத் தயாராக இருக்கிறேன். அந்த காட்சிகள் குறிக்கப்பட்டிருக்கிறது. அதை நீக்க நான் சம்மதம் தெரிவித்திருக்கிறேன்.
எனக்கும் என் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இடையேயான பிரச்னை தீர்ந்துவிட்டது. இனி இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் எனக்கும், என் ரசிகர்களுக்கும் பதற்றம் ஏற்படுத்தும் வேறு பிரச்னைகள் உருவாகி வருவதாகச் செய்திகள் வருகிறது. எனது ரசிகர்களை காக்க வேண்டிய பொறுப்பு சட்டத்துக்கும் அரசுக்கும் உள்ளது.
இவ்வாறு கமல் கூறினார். காங்கிரஸ் எம்.பி. ஆருண் கூறும்போது, ‘எல்லா இஸ்லாமிய அமைப்பினருடனும் பேசி அவர்கள் முன்வைத்த கருத்துக்களை கமலிடம் சொன்னோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டு சில காட்சிகளை நீக்க முன்வந்திருக்கிறார். எங்களுக்குள் இருந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது’ என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குர்ஆன் தொடர்பான காட்சிகளை நீக்க கமல் சம்மதம்
» விஸ்வரூபம்… சர்ச்சைக் காட்சிகளை நீக்க கமல் சம்மதம்?
» விஸ்வரூபம் படத்தில் ஒரு மணி நேர காட்சிகளை நீக்க கோரி அரசு அதிகாரிகள் வலியுறுத்தல்?
» விஸ்வரூபத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள் விதித்த தடையை நீக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் கமல் புதிய மனு
» தியேட்டர்காரர்களுக்கு ரூ.6 கோடி தர விஜய் சம்மதம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum