படத்தை திரையிடக் கோரி ரசிகர்கள் சாலை மறியல்,ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
படத்தை திரையிடக் கோரி ரசிகர்கள் சாலை மறியல்,ஆர்ப்பாட்டம்
திருச்சி: கலையரங்கம் திரையரங்கில் காலை 7 மணிமுதலே ரசிகர்கள் கூட்டம் வர தொடங்கியது. தடை உத்தரவு நேற்று காலை வரை விலக்கி கொள்ளப்படவில்லை. காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. ஆத்திரமடைந்த ரசிகர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சை: கும்பகோணம், பட்டுக்கோட்டை, தஞ்சை ஆகிய 3 இடங்களில் உள்ள திரையரங்குகளில் படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் மற்றும் வருவாய் துறையினரின் குறிப்பிட்ட திரையரங்குகளுக்கு சென்று படத்தை திரையிட வேண்டாம் என எச்சரித்தனர். கும்பகோணத்தில் பக்தபுரி தெருவில் உள்ள திரையரங்கம் முன் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்: நடேஷ் தியேட்டருக்கு தாசில்தார் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் வந்து கோர்ட் உத்தரவு நகல் வந்தபிறகே படத்தை திரையிட வேண்டும் என்றனர். இதையடுத்து டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. தமிழக அரசை கண்டித்து தியேட்டர் முன் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை: சாந்தி தியேட்டரில் குவிந்திருந்த ரசிகர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் கமல் ரசிகர் நற்பணி இயக்க மாவட்ட பொறுப்பாளர் கமல்சுதாகர் தலைமையில் காலையில் இருந்து பட்டினி போராட்டத்தை துவக்கினர்.
கோவை: சாந்தி, சென்ட்ரல், கங்கா, புரூக் பீல்டு உள்பட 6 தியேட்டர்களில் படத்தை நேற்று திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தியேட்டர் நிர்வாகத்தினர் திரையிட மறுத்து விட்டனர். கோவை சாந்தி தியேட்டர் முன் குவிந்திருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காலை 11 மணி வரை காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். ரோட்டில் டிக்கெட்டுடன் ஊர்வலமாக சென்ற ரசிகர்கள் கலெக்டர் அலுவலகம் முன் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்ட்ரல் தியேட்டரில் விஸ்வரூபம் படம் பார்க்க வந்த ரசிகர்கள், திரையிடாததால் ஆவேசமடைந்து மேட்டுப்பாளையம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெட்ரோல் குண்டு: கோவையில் குனியமுத்தூரில் பழைய பிளாஸ்டிக், காலி பாட்டில் விற்பனை செய்யும் குடோனில் 12 பெட்ரோல் குண்டு பாட்டில்கள் சிக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தென்காசியை சேர்ந்த முஜி (எ) முத்தலிப்(25), மேலப்பாளையத்தை சேர்ந்த அன்சர் அலி(27) ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நாகர்கோவில்: குமரி மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினர் மாவட்ட பொறுப்பாளர் சசி என்ற ஜெயபிரகாஷ் தலைமையில் அண்ணா ஸ்டேடியம் பகுதியில் இருந்து பைக்குகளில் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தனர். கமலுக்கு ஆதரவாகவும், போலீசாருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
ஈரோடு: விஎஸ்பி தியேட்டரில் காலை 10 மணிக்கு படம் திரையிடப்பட்டது. திடீரென ஆபரேட்டர் அறைக்குள் நுழைந்த போலீசார், திரையிடக்கூடாது என கூறினர். 10.40 மணிக்கு படம் நிறுத்தப்பட்டது. பாதியில் நிறுத்தப்பட்டதால் ஆவேசம் அடைந்த ரசிகர்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர் திருப்பூர்: சீனிவாசா, ஸ்ரீதேவி தியேட்டரிலும் நேற்று காலையில் இருந்தே ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் வாங்கி காத்திருந்தனர். மதியம் 12.30 மணியளவில் திரையிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த ரசிகர்கள் அவிநாசி ரோட்டில் மறியல் செய்தனர்.
சேலம்: லைன்மேட்டில் உள்ள கேஸ்.எஸ் தியேட்டர் முன்பு தோரணங்கள் கட்டி கமல் ரசிகர்கள் உற்சாகத்துடன் இருந்தனர். ஆனால் படம் திரையிடவில்லை. இதையடுத்து போலீசார், ரசிகர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். ராமநாதபுரம்: டி சினிமா தியேட்டர் முன் முகத்தில் கைகுட்டை மற்றும் துண்டுகளை கட்டிக்கொண்டு வந்த 10 பேர் கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியது. பாட்டில்களும் வீசப்பட்டன. இதில் தியேட்டரின் முகப்பு பகுதி சேதமாகியது. ஜெகன் தியேட்டரில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படத்தை திரையிடக் கோரி ரசிகர்கள் சாலை மறியல்,ஆர்ப்பாட்டம்
» காசிமேட்டில் சுனாமி வீடுகளை வழங்க கோரி சாலை மறியல்
» மெட்ரோ ரயில் திட்டம்: திருவொற்றியூர் வரை நீட்டிக்கக் கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
» அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!
» கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் கடல் படத்தை தடை செய்யக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு
» காசிமேட்டில் சுனாமி வீடுகளை வழங்க கோரி சாலை மறியல்
» மெட்ரோ ரயில் திட்டம்: திருவொற்றியூர் வரை நீட்டிக்கக் கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
» அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!
» கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் கடல் படத்தை தடை செய்யக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum