தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாரா, சமந்தா மறுத்த பாடலுக்கு பிரியாமணி டான்ஸ்

Go down

நயன்தாரா, சமந்தா மறுத்த பாடலுக்கு பிரியாமணி டான்ஸ்  Empty நயன்தாரா, சமந்தா மறுத்த பாடலுக்கு பிரியாமணி டான்ஸ்

Post  ishwarya Wed Mar 13, 2013 1:07 pm

சென்னை : நயன்தாரா, சமந்தா ஆட மறுத்த பாடலுக்கு இப்போது பிரியாமணி ஆடுகிறார். ஷாரூக் கான், தீபிகா படுகோன் நடிக்கும் இந்தி படம், ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. ரோகித் ஷெட்டி இயக்கிறார். மும்பையில் இருந்து ராமேஸ்வரம் வரும் ரயிலில் நடக்கும் கதையான இதில் சத்யராஜ், மனோரமா உட்பட தமிழ் நடிகர், நடிகைகள் பலர் நடிக்கிறார்கள். இதில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு ஆட நயன்தாராவிடம் கேட்டனர்.

அவர் மறுத்துவிட்டதால் இப்போது பிரியாமணி ஆடுகிறார். இதுபற்றி பட யூனிட் கூறும்போது, ‘நயன்தாரா, சமந்தா உட்பட பல நடிகைகளிடம் ஒரு பாடலுக்கு ஆட கேட்டோம். கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர்களால் இதில் பங்கு பெற முடியவில்லை. பிரியாமணியின் கால்ஷீட் கிடைத்ததால் அவர் ஆடுகிறார். விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. ராஜூ சுந்தரம் நடனம் அமைக்கிறார்’ என்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum