அமாவாசை வழிபாடு மகிமை
Page 1 of 1
அமாவாசை வழிபாடு மகிமை
புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மற்ற எந்த நாளையும் விட மாதத்தில் ஒருநாள் வரும் அமாவாசை தின வழிபாடுதான் மிக, மிக மகிமை நிறைந்ததாக கருதப்படுகிறது. இதனால் அமாவாசை நாட்களில் மட்டும் புட்லூர் தலத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு விடுகிறார்கள்.
அமாவாசை தினத்தன்று இரவு முழுவதும் புட்லூர் தலத்தில் இருந்தாலே போதும், தங்களை பிடித்த பீடைகள், திருஷ்டிகள் கழிந்து புத்துணர்ச்சியுடன் புதுவாழ்வு கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் அமாவாசை தினத்தன்று புட்லூர் தலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தங்கி இருந்து இரவை கழிக்கிறார்கள்.
இத்தகைய பக்தர்களுக்காக சில மாதங்களுக்கு முன்பு வரை அமாவாசை தின இரவில் அங்காள பரமேஸ்வரியை ஊஞ்சலில் வைத்து தாலாட்டி வழிபடும் வழக்கம் இருந்தது. பிறகு சில காரணங்களால் அந்த ஊஞ்சல் வழிபாடு நிறுத்தப்பட்டு விட்டது.
தற்போது அமாவாசை தினத்தன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து விடுவார்கள். பக்தர்கள் அம்மனை தரிசித்து செல்வார்கள். மற்றபடி அமாவாசை இரவுக்கென்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» தை அமாவாசை : புண்ணியங்கள் தரும் முன்னோர் வழிபாடு
» தை அமாவாசை : புண்ணியங்கள் தரும் முன்னோர் வழிபாடு
» ஆடி அமாவாசை வழிபாடு
» ஆடி அமாவாசை வழிபாடு
» அமாவாசை வழிபாடு
» தை அமாவாசை : புண்ணியங்கள் தரும் முன்னோர் வழிபாடு
» ஆடி அமாவாசை வழிபாடு
» ஆடி அமாவாசை வழிபாடு
» அமாவாசை வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum