தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தை அமாவாசை : புண்ணியங்கள் தரும் முன்னோர் வழிபாடு

Go down

  தை அமாவாசை : புண்ணியங்கள் தரும் முன்னோர் வழிபாடு Empty தை அமாவாசை : புண்ணியங்கள் தரும் முன்னோர் வழிபாடு

Post  ishwarya Fri May 24, 2013 12:37 pm

ஜோதிட சாஸ்திரத்தில் அயனம், பருவம், பட்சம், மாதம், வாரம், நாள், ராசி, நட்சத்திரம், திதி என பல அம்சங்கள் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து வரும்போது ஒவ்வொரு விரதங்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. வான சாஸ்திரம், ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன் - சந்திரன் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் பிரவேசிக்கிறார். இந்த மாதம் தை. இதற்கு உத்தராயன காலம் என்று பெயர். சனீஸ்வர பகவான் வீடாகிய மகர ராசியில் இருக்கும் சூரியனுடன் சந்திரன் சேரும்போது தை அமாவாசை பிறக்கிறது, இது இந்த உத்தராயன காலத்தில் வரும் முதல் அமாவாசையாகும்.

திதிகளிலே மிகவும் பிரசித்தி பெற்றது, மகத்துவம் நிறைந்தது அமாவாசை. இந்த நாளில் இறந்த முன்னோர்களையும், தாய், தந்தையரையும் நினைத்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம். கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற நூல்களில் அமாவாசையின் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இறந்தவர்களை நினைத்து வழிபடுவதால் அவர்கள் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும் என்றும், அவர்களின் பரிபூரண ஆசிர்வாதம் சந்ததியினருக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற வழிபாடுகளால், மறைந்துவிட்ட முன்னோரை கண்ணால் காணும் பாக்யமும் கிடைக்கும்.

பொதுவாக அமாவாசையன்று புண்ணிய நதிகள், கடல் போன்ற நீர் நிலைகளில் நீராடி திதி கொடுப்பார்கள். இஷ்ட தெய்வ ஆலயங்களில் வழிபாடு செய்து இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வார்கள். மறைந்த தாய், தந்தையர் படங்களுக்கு வீட்டில் மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலை வாழை இலையில் படைத்து வணங்குவார்கள். சில முக்கிய ஊர்களில் திதி கொடுத்து வழிபடுவதை விசேஷமாக கருதுகிறார்கள். தமிழகத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமக தீர்த்தகுளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு, கன்னியாகுமரி ஆகிய தலங்கள் முக்கியமானவை. வடநாட்டில் காசி, கயா, பத்ரிநாத், அலகாபாத் திரிவேணி சங்கமம் மற்றும் கேரளாவில் ஐவர் மடம் பிரசித்தி பெற்றது.

அமாவாசை வழிபாடுகளில் சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானது. அன்றைய தினம் சூரியனை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்து சூரிய காயத்ரி மந்திரம் சொல்லி வணங்குவது சிறப்பு. பிதுர்க்காரகனாகிய சூரியன் நாம் செய்யும் தான தருமங்களுக்கான பலன்களை பிதுர் தேவதைகளிடம் வழங்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. கோதுமையில் செய்த உணவுகளை தானம் செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கும். பிதுர் வழிபாட்டில் காகம் மிக முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, பசு மாட்டுக்கும், காகத்துக்கும் முதலில் உணவளிப்பது மிகவும் சிறப்பானதும், புண்ணியம் சேர்ப்பதும் ஆகும்.

புதிய செயல்கள் தொடங்கலாமா?

அமாவாசை நிறைந்த நாள் என்று சொல்லி நல்ல காரியங்களை ஆரம்பிக்கிற வழக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆனால் சாஸ்திரத்தில் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அமாவாசை என்பது இருட்டு நாள், நீத்தார் நினைவு நாள் என்றே பல சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரயோதசி திதி முதல் பிரதமை திதி வரை எந்த புதிய விஷயங்களும் ஆரம்பிக்க கூடாது என பிரதோஷ வழிபாடு என்ற நூல் வலியுறுத்துகிறது, ஆகையால் அமாவாசையன்று புதிய தொடக்கங்கள், அக்ரிமென்ட் போடுவது, வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அமாவாசையன்று கோயில்களில் வழிபாடு செய்வது உத்தமமாகும். குறிப்பாக குலதெய்வ வழிபாடு, கிராம தேவதைகள், காவல் தெய்வங்கள், உக்கிர தெய்வங்கள் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். அமாவாசையன்று சிவ ஸ்தலங்களில் அன்னதானம், வஸ்திரதானம் செய்வது விசேஷமானது.

‘அமாவாசை’ - ‘பவுர்ணமி’ திருமணம் செய்யலாமா?

அமாவாசை கும்மிருட்டு. பவுர்ணமி பூரண வெளிச்சம். அமாவாசையில் பிறந்தவர்கள், அமாவாசையில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாம். அதேபோல பவுர்ணமியில் பிறந்தவர்கள், பவுர்ணமியில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாம். ஒரே மாதத்தில் வரும் அமாவாசையில் பிறந்த ஆண், பெண் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். உதாரணமாக சித்திரை அமாவாசையில் பிறந்த ஆணும், சித்திரை அமாவாசையில் பிறந்த பெண்ணும் திருமணம் செய்ய கூடாது. இது பவுர்ணமிக்கும் பொருந்தும். அமாவாசையில் பிறந்தவர்கள் பவுர்ணமியில் பிறந்தவர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பதும் நல்லது. இந்த கருத்துகள் பழமையான ஜோதிட நூல்களின் சாராம்சமாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum