தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளம் நடிகர்களுடன் ஜோடி சேர அசின் ஆசை

Go down

 இளம் நடிகர்களுடன் ஜோடி சேர அசின் ஆசை  Empty இளம் நடிகர்களுடன் ஜோடி சேர அசின் ஆசை

Post  ishwarya Tue Mar 12, 2013 6:22 pm

சென்னை : இளம் நடிகர்களுடன் நடிக்கமாட்டேன் என்று ஒருபோதும் சொன்னதில்லை என அசின் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: தொடர்ந்து பிசியாக நடித்துக்கொண்டிருந்ததால் லீவு கிடைக்கவில்லை. இப்போது கொஞ்சம் நேரம் கிடைத்ததும் என் பள்ளித் தோழிகளுடன் அமெரிக்கா சென்று வந்தேன். இந்தியில் ‘கஜினி’ படத்தில் அறிமுகமானபோது, கான் மற்றும் குமார் ஹீரோக்களுடன் நடித்தால்தான் இன்டஸ்ட்ரியில் நிலைக்க முடியும் என்று சொன்னார்கள்.

அதன்படி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தேன். ஆனால் இன்னும் முழுமையான நடிப்பை வெளிப்படுத்திய திருப்தி எனக்கு கிடைக்கவில்லை. என்னுள் வெளிவராத நடிப்பு திறமை இருக்கிறது. அதை வெளிப்படுத்தக்கூடிய வேடங்களுக்காக காத்திருக்கிறேன். யாருக்கும் போட்டியாக நான் இருக்க விரும்பவில்லை. ஆனால் முழுமையான நடிகையாக இருக்க எண்ணுகிறேன்.

இளம் நடிகர்களுடன் நான் நடிக்க மறுப்பதாக கூறுகிறார்கள். அது உண்மை அல்ல. என்னை தேடி பெரிய படங்கள் வந்தன. அதனால் ஏற்றேன். இதனால் பெரிய ஹீரோக்களுடன்தான் நடிக்க விரும்புவதாக கூறுவது தவறு. இளம் ஹீரோக்களுடனும் நடிக்க விரும்புகிறேன். அதுபோன்ற படங்களை ஏற்க மாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு நான் பெரிய நடிகை அல்ல. இவ்வாறு அசின் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum