தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘‘லத்திகா பார்க்க சொன்னார் பவர் ஸ்டார்..!’’ ரகசியம் சொல்கிறார் விசாகா

Go down

      ‘‘லத்திகா பார்க்க சொன்னார் பவர் ஸ்டார்..!’’ ரகசியம் சொல்கிறார் விசாகா  Empty ‘‘லத்திகா பார்க்க சொன்னார் பவர் ஸ்டார்..!’’ ரகசியம் சொல்கிறார் விசாகா

Post  ishwarya Tue Mar 12, 2013 5:04 pm

‘பிடிச்சிருக்கு’ மூலம் தமிழுக்கு வந்த விசாகாவை, பிறகு யாருக்கும் பிடிக்கவில்லை போல. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் ‘லட்டு’வாகி இருந்தார். 50 விளம்பர படங்களுக்கு மேல் நடித்திருக்கிற விசாகாவை, ‘டல் திவ்யா, இப்போ தூள் திவ்யா’ விளம்பரம் எல்லார் வீட்டுக்குள்ளும் கொண்டு வந்திருக்கிறது. ‘‘‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ டைரக்டர் மணிகண்டன், உங்க பேரை திவ்யான்னே மாத்திக்கோங்களேன். நல்லா ரீச்சாகும்னு சொன்னார். எனக்குத்தான் என் ஒரிஜினல் பெயரை மாற்ற மனசில்லை...’’ என்கிறார் விசாகா பெரும் புன்னகையுடன்.

தமிழ் ரீ என்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆயிருக்கே?
இல்லை. நடிகையாகணும்னு நான் எப்பவும் நினைச்சதில்லை. டெல்லியில காலேஜ் படிச்சுட்டு இருக்கும்போது, மாடலிங் பண்ணலாம்னு நினைச்சு ஆரம்பிச்சேன். தெலுங்கு படத்துல அறிமுகமாகிற வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் ‘பிடிச்சிருக்கு’. அதுக்குப் பிறகு இந்தில ‘ஹம்சே ஹே ஜவான்’ பண்ணினேன். அடுத்து கன்னடத்துல ‘ஹவுஸ்ஃபுல்’, ‘அந்தராத்மா’ பண்ணினேன். அப்புறம் ‘தி ஜீனியஸ் ஆஃப் பியூட்டி’னு ஒரு இங்கிலீஷ் படம். பிறகு இந்தியில அஷூதோஷ் கோரிகர் இயக்கத்துல அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன் நடிச்ச ‘ஹெலின் ஹம் ஜீ ஜான் சே’ படத்துல நடிச்சேன். இதுக்கிடையில அனுராக் காஷ்யப்போட சேர்ந்து ‘பெடலர்ஸ்’ங்கற படத்தை தயாரிச்சேன். இது கேன்ஸ் பட விழாவுல திரையிடப்பட இருந்தது. அப்பதான் டைரக்டர் மணிகண்டனோட அசிஸ்டென்ட்கிட்ட இருந்து எனக்கு கால் வந்தது. அவங்க என் பேஸ்புக் ஃபிரண்ட். ஆடிஷன் வந்தேன். 250 பேர்ல என்னை செலக்ட் பண்ணினாங்க. இதுதான் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வுக்குள் நான் என்டர் ஆன கதை.

பவர் ஸ்டார் கூட நடிச்சிருக்கீங்க? என்ன சொன்னார்?
ஷூட்டிங்ல எப்பவும் கலகலப்பா இருக்கும். பவர் ஸ்டாரை சந்தானம்தான் அறிமுகப்படுத்தினார். அவரோட நடிக்கும்போது முதல்லயே சிரிக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணி நடிப்பேன். ஆனா, முடியாது. அவர் சின்னதா டான்ஸ் ஆடினாலே எனக்கு குபுக்குனு சிரிப்பு வந்துரும். அடக்கிக் கிட்டே நடிச்சேன். பவர் ஸ்டாருக்கு லேங்குவேஜ் பிரச்னை. அதனால கொஞ்சமாதான் பேசினேன். அவர் என்கிட்ட ஒருமுறை பேசும்போது, ‘நான் நடிச்ச ‘லத்திகா’ படம் முந்நூறு நாள் ஓடியிருக்கு. நீங்க கண்டிப்பா பார்க்கணும்’னு சொன்னார். நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன்னு சொன்னேன். இப்ப வரை நேரம் கிடைக்கலை. பவர் ஸ்டாரை விட அவர் மனைவிதான் எனக்கு பெஸ்ட் ஃபிரண்ட். அவங்க நல்லா இந்தி பேசுவாங்கங்கறதால எனக்கு பிரச்னையில்லாம இருந்தது.

கிளாமரா நடிக்க மறுக்கிறீங்களாமே?
அப்படியில்லை. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வுல கூட ‘ஏய் உன்னைத்தான்...’ பாடல்ல அப்படி நடிச்சிருப்பேன். அதுல வல்கர் இருக்காது. முதல்லயே டைரக்டர் மணிகண்டன் சொன்னார், ‘ரொம்ப கிளாமராக இந்தப் பாடலை படம் பண்ணலை’னு. அதனால கொஞ்சமா கிளாமர் இருக்கும். எனக்கு பக்கத்து வீட்டு பெண் இமேஜ் இருக்கு. அதை விட்டுட்டு கிளாமர் பண்ணினா பொருத்தமா இருக்காது.

‘க.ல.தி.ஆ.’ ஹிட்டுக்குப் பிறகு எப்படி உணர்றீங்க?
இந்தப் படம் என்னை ரசிகர்கள்கிட்ட அதிகமா கொண்டு போயிருக்கு. சென்னை, ஐதராபாத் விமான நிலையங்கள்ல நிறைய பேர் கவனிச்சு வாழ்த்து சொல்றாங்க. போட்டோ எடுத்துக்கிறாங்க. அவ்வளவு ஏன்? கல்யாண புரபோசல் கூட வந்ததுன்னா பாருங்களேன்!

இந்தியில படம் தயாரிக்கிறீங்க. தமிழ்ல?
இந்தி சினிமா மார்க்கெட் எனக்குத் தெரியும். தமிழ்ல அந்த ஏரியா தெரியாது. அதுமட்டுமில்லாம தமிழ்ல இப்ப நடிப்புலதான் கவனம் செலுத்த போறேன். தெலுங்கு, தமிழ்ல சில வாய்ப்புகள் வந்திருக்கு. மலையாளத்துல ‘மோட்டர் சைக்கிள் டைரீஸ்’ங்கற படத்துல நடிச்சுட்டு இருக்கேன். இந்தியில ‘அங்கூர் அரோரா மர்டர் கேஸ்’, ‘புக்ரே’ படங்கள்ல நடிக்கிறேன். இப்போதைய நிலைமை இதுதான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum