தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் ரசிகர்கள் இனிமையானவர்கள்: பப்பி லஹிரி

Go down

தமிழ் ரசிகர்கள் இனிமையானவர்கள்: பப்பி லஹிரி  Empty தமிழ் ரசிகர்கள் இனிமையானவர்கள்: பப்பி லஹிரி

Post  ishwarya Tue Mar 12, 2013 2:36 pm

சென்னை : இரட்டை வேடங்களில் அஜ்மல், அபர்ணா பாஜ்பாய் நடிக்கும் படம், ‘கருப்பம்பட்டி’. சுந்தர் தயாரிக்கிறார். பிரபுராஜசோழன் இயக்குகிறார். இதில் கண்ணன் இசையமைப்பில் கபிலன் எழுதிய ‘நாட்டி ராஜா ராஜா’ என்ற டிஸ்கோ பாடலை, பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி பாடியுள்ளார். இப்படத்தின் டிரைலரை சென்னையில் நடந்த விழாவில் வெளியிட்ட பப்பி லஹிரி, அப்போது பேசியதாவது:

சென்னையை எனக்கு மிகவும் பிடிக்கும். உடம்பு முழுக்க இவ்வளவு நகைகள் அணிந்து வந்துள்ளேன். என்றாலும், செக்யூரிட்டிகளை வைத்துக்கொள்ளவில்லை. தமிழ் ரசிகர்கள் மிகவும் மென்மையானவர்கள், இனிமையானவர்கள். இந்தியில் நான் இசையமைத்துள்ள பல படங்களின் பாடல் கம்போசிங்கிற்காக சென்னைக்கும், மாமல்லபுரத்தும் வந்திருக்கிறேன். இப்போது அந்தப் பசுமையான நினைவுகளில் மூழ்கியிருக்கிறேன்.

கண்ணன் இசையில் ‘நாட்டி ராஜா’ பாடலைப் பாடியது மறக்க முடியாத அனுபவம். இந்தியில் நான் இசையமைக்க வந்து 40 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே ஓரிரு தமிழ்ப் படத்துக்கு இசையமைத்துள்ளேன். இப்போது 40வது வருட நிறைவில், ஒரு தமிழ்ப் பாடலைப் பாடியதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். 80களில் வந்த டிஸ்கோ டான்ஸ் பாடல் வரிசையில் அமைந்த ‘நாட்டி ராஜா’ ஹிட்டாகியுள்ளது. அஜ்மல் சிறப்பாக நடனமாடியுள்ளார். இப்படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். அஜ்மல், அபர்ணா பாஜ்பாய், கண்ணன், அசோக்ராஜா, பிரபுராஜசோழன் உடனிருந்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒல்லி நடிகைகளை விரும்பும் தமிழ் ரசிகர்கள் – ரம்யா நம்பீசன்
» ‘கடல்’ பட ஜோடிகளை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய மணிரத்னம்: தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம்
» சிங்கப்பூரில் 10,000 தமிழ் ரசிகர்கள் முன் பிரமாண்டமாக நடந்த மாற்றான் இசை வெளியீடு!
» பப்பி லஹ‌ரி பாடிய கருப்பம்பட்டி
» பப்பி லஹ‌ரி பாடிய கருப்பம்பட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum