தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பப்பி லஹ‌ரி பாடிய கருப்பம்பட்டி

Go down

பப்பி லஹ‌ரி பாடிய கருப்பம்பட்டி Empty பப்பி லஹ‌ரி பாடிய கருப்பம்பட்டி

Post  ishwarya Mon Mar 04, 2013 11:57 am

பாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரான பப்பி லஹ‌ரி முதல்முறையாக கருப்பம்பட்டி படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

கொஞ்சம் பழைய மேட்டர் தான். கருப்பம்பட்டி படமே பல வருடப் பழக்கம் உள்ளது தான். கொஞ்சநாள் கிடப்பில் போட்டு மறுபடியும் தூசு தட்டியிருக்கிறார்கள்.

அ‌ஜ்மல், அபர்ணா பா‌ஜ்பாய் நடித்திருக்கும் இந்தப் படம் இருவேறு காலகட்டங்களில் பயணிக்கிறது. 1950ல் ஒரு கதை, 2013ல் ஒரு கதை. படம் இந்த வருடம் வெளியாகாமல் தள்ளிப் போனால் 2013 என்பது 2014 ஆக மாறும். 2013 என்பது படம் வெளியாகும் ஆண்டைப் பொறுத்தது.

சென்னை, புதுக்கோட்டை, பழனி என்று பயணிக்கும் கதை சடாரென்று பிரான்சுக்கு செல்கிறது. இதில் முக்கியமானது டூயட்டுக்காக இல்லை என்பது தான். எல்லாம் வசனக் காட்சிகள். 25 நிமிடங்களுக்கு பிரெஞ்சில் வசனம் வருகிறது. சப் டைட்டில் எதுவும் இல்லாமல் அப்படியே விடப் போகிறாராம் இயக்குனர் பிரபு ராஜசோழன். கதையோட்டத்தில் பிரெஞ்ச் வசனம் வருகிற காட்சிகளும் பு‌ரியுமாம் (கமலுக்கு அண்ணனாக இருப்பாரோ?).

அ‌ஜ்மல் ஒரு கெட்டப்பில் தொங்கு மீசையுடன் குழந்தைகளை பயமுறுத்துகிற மாதி‌ரி இருக்கிறார். படம் எப்போ சார் ‌ரிலீஸ்...?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum