தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆமிர்கான் மறுத்த கதையை இயக்குகிறார் மணிரத்னம்

Go down

ஆமிர்கான் மறுத்த கதையை இயக்குகிறார் மணிரத்னம்  Empty ஆமிர்கான் மறுத்த கதையை இயக்குகிறார் மணிரத்னம்

Post  ishwarya Tue Mar 12, 2013 12:13 pm

இந்தி படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் மணிரத்னம். கார்த்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி நடித்த படம் ‘கடல். மணிரத்னம் இயக்கிய இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஆனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் ‘கடல்‘ படம் தங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கான நஷ்ட ஈட்டு தொகையை மணிரத்னம் தர வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தனர். ஆனால் படத்தை ஏற்கனவே வேறு நிறுவனத்துக்கு விற்றுவிட்டதால் தனது நிறுவனம் நஷ்டஈடு தராது என்று மணிரத்னம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மணிரத்னம் அடுத்து இந்தி படம் இயக்க திட்டமிட்டுள்ளார். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு ஆமிர்கானை வைத்து ‘லஜ்ஜா என்ற படத்தை இயக்க மணிரத்னம் முடிவு செய்தார்.

சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. பாலிவுட் எழுத்தாளர் அனுராக் கஷ்யப்வுடன் இணைந்து இக்கதையை சினிமாவுக்கு ஏற்ப மாற்றம் செய்ய முடிவு செய்தார். உருது எழுத்தாளர் இஸ்மத் சுஹ்தயின் கதையை அடிப்படையாக வைத்து இது உருவாக்கப்பட்டது. கதை உரிமை பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகள் குறுக்கிட்டது. படம் தாமதமானதால் ஆமிர்கான் நடிக்க மறுத்து விலகிக் கொண்டார். இதையடுத்து இந்த புராஜெக்ட் நிறுத்தப்பட்டது. சமீபத்தில் மும்பை சென்ற மணிரத்னம், மீண்டும் இப்படத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். பாலிவுட் எழுத்தாளர் ரென்சில் டி சில்வாவுடன் இணைந்து இந்த ஸ்கிரிப்டை அவர் எழுதி வருகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரிக்ஷாக்காரர் மகன் திருமணத்திற்குப் போகும் ஆமிர்கான்!
» ‘ஸ்பைடர்மேன்’ கதையை மிஞ்சும் ‘முகமூடி’
» என் சொந்தக் கதையை படமாக்குவதில்தான் விருப்பம் அதிகம்! – இயக்குநர் சுசீந்திரன் பேட்டி
» கதையை மாத்துங்க…கவுதமிடம் விஜய் யோசனை
» கதையை மையப்படுத்தித்தான் கதாநாயகன் மார்க்கெட் உயரும்: இயக்குனர் விக்ரமன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum