என் சொந்தக் கதையை படமாக்குவதில்தான் விருப்பம் அதிகம்! – இயக்குநர் சுசீந்திரன் பேட்டி
Page 1 of 1

மற்றவர் எழுதித் தரும் கதைகளை விட, நானே உருவாக்கும் கதைகளைப் படமாக்குவதுதான் வசதியாக உள்ளது. அதுவே என் விருப்பமும் கூட, என்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு என்ற தனது முதல் படத்திலேயே பலரையும் புருவம் உயர்த்த வைத்தவர்.
அடுத்து நான் மகான் அல்ல படத்தில் வேறு பரிமாணம் காட்டி வியக்க வைத்தார். அழகர்சாமியின் குதிரை என்ற க்ளாஸிக் படத்தை, இளையராஜா கூட்டணியோடு தந்து புதிய நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
இப்போது விக்ரம் நடிக்க ராஜபாட்டை என்ற பொழுதுபோக்கு ஆக்ஷன் படத்தை உருவாக்கி வருகிறார்.
பொழுதுபோக்கு சினிமாக்களில் இன்னொரு ரசனைக்குரிய படமாக ராஜபாட்டை அமையும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சுசீந்திரன் தனது படங்கள், அடுத்து செய்யவிருக்கும் படைப்புகள், தமிழ் சினிமாவின் போக்கு குறித்த தனது பார்வைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அவரது பேட்டி:
பொதுவாக இந்த இயக்குநர் இப்படித்தான் படம் இயக்குவார் என ஒரு இமேஜ் இருக்கும். ஆனால் உங்கள் படங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாமல் உள்ளன. நமக்கென ஒரு பாணி வேண்டும் என நினைக்கவில்லையா?
நிச்சயம் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. மணிரத்னத்தின் அஞ்சலி வேறு, தளபதி வேறு. ஷங்கர் சார் இயக்கும் படங்களும் அப்படித்தான். என் படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் வேறு மாதிரி இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
என்படம் இந்த ரகம் என்ற முத்திரையை நான் விரும்பவில்லை.
புதுமுகங்களை இயக்குவது, அனுபவமிக்க நடிகர்களை இயக்குவது… எது பெஸ்ட்?
நிச்சயம் அனுபவமிக்கவர்களை இயக்குவதுதான் வசதியானது. சுலபத்தில் வேலை வாங்க முடியும். புதுமுகங்கள் என்றால், அவர்களை முதலில் இந்த கதைக்குள் கொண்டு வரவேண்டும், நிறைய முன்தயாரிப்பு ஒத்திகைகள் தேவை.
விஷ்ணு என்ற புதுமுகத்தை இயக்குவதைவிட, விக்ரமை இயக்கும் போது சிரமம் குறைவு என்பது உண்மைதானே.
அப்படியெனில், இனி வசதிக்காக அனுபவப்பட்ட பெரிய நடிகர்களைத்தான் இயக்குவீர்களா?
அது எப்படி… ஆரம்பத்தில் எல்லாருமே புதுசுதானே… போகப்போகத்தான் எல்லோரும் கற்றுக் கொள்கிறார்கள். என் ஒவ்வொரு படத்திலும் ஒரு புதுமுகத்தை நடிக்க வைப்பது என்பதில் உறுதியோடு இருக்கிறேன்.
ராஜபாட்டை எப்படி வந்திருக்கிறது?
விக்ரமின் கலர்ஃபுல் படமாக வந்துள்ளது. 14 கெட்டப்புகளில் வருகிறார். அவர் நடிப்புக்கு நல்ல தீனி. எனக்கும் பெரிய வேலைதான். பெரும்பகுதி முடிந்துவிட்டது. 4 பாடல்கள். அவற்றில் ஒன்றில் ஸ்ரேயாவும் ரீமா சென்னும் ஆடுகிறார்கள். இந்தப் பாடலை இத்தாலியிலும், ஹீரோயின் தீக்ஷாவுடன் விக்ரம் ஆடும் இன்னொரு பாடலை ஆஸ்திரியாவிலும் எடுக்கிறோம். டிசம்பரில் ராஜபாட்டை வெளியாகும்.
அடுத்த படம் பற்றி…
உங்கள் அடுத்த படம் குறித்து…
இந்தப் படத்துக்கு வீர தீர சூரன் என்று தலைப்பு வைத்திருக்கிறோம். விஷ்ணு நடிக்கிறார். தெலுங்கிலும் இந்தப் படம் தயாராகிறது. தெலுங்கில் வேறு ஹீரோ. மற்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. முழுக்க முழுக்க காமெடி கதை இது. நானே எழுதிய கதை. மற்ற விவரங்களை பின்னர் சொல்கிறேன். இப்போதைக்கு முழு கவனமும் ராஜபாட்டையில்தான்.
நீங்களே எழுதும் சொந்தக் கதை, அடுத்தவர் எழுதித் தரும் கதை எது உங்களுக்கு வசதியானது?
நிச்சயம் சொந்தக் கதைதான் வசதியானது. நம் கதை என்றால் அதன் முழு விவரம், எழுதப்பட்ட மனநிலை எல்லாம் நமக்குத் தெரியும். ஆழ பயணிக்கலாம். அடுத்தவர் கதையில் இந்த வசதி இல்லை. எனது முதல் இரு படங்கள் என் சொந்தக் கதை. அடுத்த இரண்டும் மற்றவர்கள் கதை. அடுத்து வீர தீர சூரன் என் கதைதான்.
உங்கள் படங்களுக்கு இசை பிரமாதமாக அமைந்துவிடுகிறது. ஆனால் குறிப்பிட்ட இசையமைப்பாளருடன் பணியாற்றுவதில்லையே ஏன்?
கதையை முதலில் இசையமைப்பாளர்களிடம் சொல்லி, அதற்குத் தேவையான இசையை கேட்டு வாங்கிக் கொள்வேன். முதல் படத்துக்குதான் வேறு ஒருவர் இசை. அடுத்தது யுவனுடன் சேர்ந்தேன். மூன்றாவது படம் இசைஞானியுடன். இப்போது மீண்டும் யுவனுடன். அடுத்த படமும் யுவன்தான்.
உங்கள் படம் எப்படி இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இயக்குகிறீர்கள்?
என் படம் போரடிக்கக் கூடாது. நல்ல ஜாலியாக, பொழுதுபோக்குப் படமாக இருக்க வேண்டும். பொழுதுபோக்கு தேடி வரும் மக்களை ஏமாற்றக் கூடாது, எந்த வகையிலும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் வாழ்க்கை கதையை நானே டைரக்டு செய்கிறேன்: நடிகை சோனா பேட்டி
» ஆக்ஷன் நடிகராகவே தொடர்ந்து நீடிக்க விருப்பம்: துப்பாக்கி பட நடிகர் வித்யுத் பேட்டி
» எடிட்டரை மாற்றிய சுசீந்திரன்
» யுவனை அசத்திய சுசீந்திரன்
» சுசீந்திரன் படத்தில் பூர்ணிமா பாக்யராஜ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum