தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜூனில் நடிகர் சங்கத் தேர்தல்

Go down

ஜூனில் நடிகர் சங்கத் தேர்தல் Empty ஜூனில் நடிகர் சங்கத் தேர்தல்

Post  ishwarya Mon Mar 18, 2013 1:47 pm

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற ஜூன் மாதம் தேர்தல் நடத்துவது என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை சேர்ந்த நடிகர்-நடிகைகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சேலம், மதுரை, கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய ஊர்களை சேர்ந்த நாடக நடிகர்கள் உள்பட மொத்தம் 1,700 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 3 வருடங்களுக்கு ஒருமுறை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறும். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், அஞ்சலிதேவி, நாகேந்திரராவ், ராதாரவி, விஜயகாந்த் ஆகியோர் நடிகர் சங்க தலைவராக பதவி வகித்து இருக்கிறார்கள். இப்போது, சரத்குமார் தலைவராக இருந்து வருகிறார். இவர், 2006-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை இரண்டு முறையாக தலைவர் பதவி வகித்து வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம், அதன் தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது. அப்போது, 2012-2015-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை வருகிற ஜூன் மாதம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இப்போது நடிகர் சங்க தலைவராக சரத்குமார் இருந்து வருகிறார். துணைத்தலைவர்களாக மனோரமா, விஜயகுமார், பொதுச்செயலாளராக ராதாரவி, பொருளாளராக வாகை சந்திரசேகர் ஆகியோர் இருந்து வருகிறார்கள். வருகிற தேர்தலில் யார்-யார் போட்டியிடுவார்கள் என்ற விவரம் இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். அரசியல் கலப்பில்லாதவங்க ஜெயிச்சா சந்தோஷம்.....

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் சங்கத் தேர்தல் - மனு தாக்கல் ஆரம்பம்
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம நாராயணன் அணி அமோக வெற்றி!
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி
» நடிகர் சங்கத் தலைவர் தன் அப்பா சரத்குமார்தான் என்பது வரலட்சுமிக்குத் தெரியாதோ!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum